மத் தீவில் பங்களா; விதவிதமான கார் என ராஜ வாழ்க்கை வாழும் விக்ராந்த் மாஸ்ஸியின் சொத்து மதிப்பு!
லூட்டெரா, சாபக் போன்ற படங்களில் படங்களில் நடித்ததற்காகப் புகழ்பெற்ற விக்ராந்த் மாஸ்ஸி , தன்னுடைய 37 வயதில் ரிட்டயர்மெண்ட்டை அறிவித்துள்ள நிலையில், இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Vikrant Massey Movies
லூட்டெரா, சாபக் போன்ற படங்களில் நடித்ததற்காகப் புகழ்பெற்ற விக்ராந்த் மாஸ்ஸி , பாலிவுட்டில் தனது வெற்றியை மிகவும் நேர்த்தியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததன் மூலம் தக்கவைத்து கொண்டவர். மத் தீவில் உள்ள அழகிய கடற்கரை வீடு முதல், சொகுசு கார்கள் என ராஜ வாழ்க்கை வாழும் இவருடைய சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
Vikrant Massey Networth
பாலிவுட்டில் தன்னுடைய திறமைகள் பிரதிபலிக்கும் வகையில், தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தவர் விக்ராந்த் மாஸ்சி. சீரியலில் ஒரு நாளைக்கு ரூ.500 ஊதியம் வாங்கி கொண்டு நடித்து வந்த இவர், தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ.1.5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
ஜெயம் ரவி படத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட பாடல்; விஜய்க்கு கொடுத்து ஹிட்டாக்கிய யுகபாரதி!
Vikrant Massey Announce Retainment
விக்ராந்த் மாஸ்ஸியை பொறுத்தவரை தனக்கு கொடுக்கப்படும் பணத்தை சம்பளம் குறைவாக இருந்தாலும், சிறந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பதை மட்டுமே தன்னுடைய இலக்காக கொண்டிருந்தார். இதுவரை இவரை தனித்துவமான நடிகராக ரசிகர்களை பார்க்க வைத்தது.
Vikrant Massey Car Collections
நடிப்பைத் தவிர, பிராண்ட் ஒப்புதல்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் மாஸ்ஸி தனது வருவாயை அதிகரிக்கிறார். மேலும் இவருடைய சொத்துக்கள் என்றால்... மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ்: ரூ.1.16 கோடி மதிப்புள்ள பிரீமியம் எஸ்யூவி கார் வைத்துள்ளார். அதே வால்வோ எஸ்90: ரூ.60 லட்சம் விலையுள்ள சொகுசு செடான், மாருதி ஸ்விஃப்ட் டிசையர் ஆகியவை இவருடைய ஃபேவரட் கார்களாக உள்ளன.
நெப்போலியன் பாணியில் குடும்பத்துக்காக 37 வயதில் ஓய்வை அறிவித்த முன்னணி நடிகர்!
Vikrant Massey Life style
அதே போல் ரூ.12 லட்சம் மதிப்புள்ள உயர் செயல்திறன் கொண்ட டூக்காட்டி மான்ஸ்டர் மோட்டார் சைக்கிளையும் வைத்துள்ளார். இவருக்கு சொந்தமாக மும்பையில் ஒரு சொகுசு பங்களா உள்ள நிலையில், மத் தீவில் ஆடம்பர பங்களா ஒன்றும் வைத்துளளார் இதன் மதிப்பு 2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
Vikrant Massey
விக்ராந்த் மாஸ்சியின் மொத நிகர மதிப்பு ரூ.20-25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் இவர், தன்னுடைய குடும்பத்திற்காக 37 வயதிலேயே சினிமாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவி சீரியல் நடிகைக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!