நெப்போலியன் பாணியில் குடும்பத்துக்காக 37 வயதில் ஓய்வை அறிவித்த முன்னணி நடிகர்!
பிரபல நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி, நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம் இதற்காக அவர் கூறிய காரணம் தான் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
Vikrant Massey Announce Retainment
பிரபல பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி, தன்னுடைய 37 வயதிலேயே நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துளளார். பல நடிகர்கள் 60 வயது 70 வயதை கடந்த பின்னரும் கூட சினிமா மீது உள்ள காதலால் திரை உலகில் இருந்து தங்களுடைய ஓய்வை அறிவிக்க முன்வராத நிலையில், தன்னுடைய குடும்பத்துக்காக நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி திரை உலகில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். இந்த தகவல் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.
Vikrant Massey Cinema Carrier
ஏப்ரல் 3-ஆம் தேதி 1987 ஆம் ஆண்டு பிறந்தவர் விக்ராந்த் மாஸ்ஸி. மும்பை மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் சின்னத்திரை மூலமாக தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார். அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு 'தூம் மச்சோ தூம்' என்கிற சீரியல் மூலம் நடிப்புக்கு பிள்ளையார் சுழு மொட்டை விக்ராத் மாஸ்ஸி, அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தார்.
விஜய் டிவி சீரியல் நடிகைக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!
Vikrant Massey Family
இதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு 'லொட்டீரா' என்கிற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான விக்ராத், இதைத்தொடர்ந்து தீபிகா படுகோன் நடித்த சப்பாக், 12th பெயில், லவ் ஹாஸ்டல், ஃபாரன்சிக், போன்ற பல திரைப்படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி மிகக் குறுகிய காலத்தில் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வார்த்தார். விக்ராந்த் மாஸ்ஸி இந்த ஆண்டு மட்டும் ஏழு படங்களில் நடித்துள்ளார்.
Vikrant Massey Emotional Post
இந்நிலையில் தன்னுடைய 37 வயதில், பிரபல தமிழ் நடிகர் நெப்போலியன் பாணியில் குடும்பத்துக்காக திரையுலகில் இருந்து விலகுவதை அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவில், "பல வருடங்களாக தனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள விக்ராந்த மாஸ்ஸி, கடந்த சில ஆண்டுகள் மிகவும் அற்புதமானவை என்று குறிப்பிட்டுள்ளார். கணவர், தந்தை, மற்றும் மகன் என்கிற தனது பாத்திரத்தில் கவனம் செலுத்த மீண்டும் வீட்டிற்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக கூறி விக்ராத் மாஸ்ஸி திரை உலகில் இருந்து விலகுவதை அறிவித்துள்ளார்.
வாலி சரக்கடித்த பின் எழுதிய பாடல்; எவர்கிரீன் ஹிட் அடித்த கதை தெரியுமா?
Vikrant Massey Retainment from Family
ரசிகர்கள் கனத்த இதயத்தோடு இவருக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர். விக்ராத் மாஸ்ஸி நடிகையும் மாடலுமான ஷீத்தல் தாகூர் என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தற்போது இவர் நடித்துவரும் இரண்டு படங்கள் இன்னும் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் இந்த படங்களை நடித்து முடித்த பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகுவார் என கூறப்படுகிறது. மேலும் இவர் நடிப்பில் வெளியான +2 பெயில் திரைப்படம் ஹிந்தியில் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்கள் மதியிலும் பாராட்டை குவித்த படமாகும்.