தமிழ் சினிமாவில் இந்த வாரம் மட்டும் 10 படங்கள் ரிலீசாகப்போகுது... அது என்னென்ன படங்கள் தெரியுமா? - முழு விவரம்
தமிழ் சினிமாவில் வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி மட்டும் 10 புதிய படங்கள் வெளியாக உள்ளன, அந்த படங்கள் பற்றிய முழு விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பெரிய நடிகர்களின் படங்கள் வரிசையாக ரிலீசாகி வருவதனால் சிறு பட்ஜெட் படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கும் சூழல் உருவாகி இருந்தது. இந்த நிலையில், தற்போது வருகிற ஆகஸ்ட் மாதமும் ஏராளமான பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு காத்திருந்தாலும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் எந்த பெரிய பட்ஜெட் படமும் ரிலீசாகவில்லை. இதனால் சிறு பட்ஜெட் படங்கள் நிறைய இந்த வாரம் ரிலீசாக உள்ளன. அதன் விவரங்களை தற்போது பார்க்கலாம்.
எண்ணித்துணிக
ஜெய் நடிப்பில் உருவாகி உள்ள படம் எண்ணித்துணிக. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். ஏற்கனவே கோமாளி படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள் இருவரும் தற்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் என்பவர் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 4-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
பொய்க்கால் குதிரை
பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள படம் பொய்க்கால் குதிரை. இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மஹா தேவகி, கஜினிகாந்த், இரண்டாம் குத்து போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
காட்டேரி
யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் டீகே அடுத்ததாக இயக்கியுள்ள படம் காட்டேரி. வைபவ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இப்படம் வருகிற ஆகஸ்ட் 5-ல் ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... கல்யாணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.30 லட்சம் அபேஸ் செய்த நடிகை திவ்யபாரதி - இளைஞர் பரபரப்பு புகார்
குருதி ஆட்டம்
அதர்வா ஹீரோவாக நடித்துள்ள படம் குருதி ஆட்டம். 8 தோட்டாக்கள் படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சீதாராமம்
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி உள்ள படம் சீதா ராமம். ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருனால் தாகூர் ஆகியோர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படமும் ஆகஸ்ட் 5-ந் தேதி ரிலீசாக உள்ளது.
விக்டிம்
விக்டிம் என்கிற ஆந்தாலஜி படமும் வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இந்த ஆந்தாலஜி படத்தை இயக்குனர்கள் வெங்கட் பிரபு, சிம்புதேவன், பா.இரஞ்சித், மற்றும் எம்.ராஜேஷ் ஆகியோர் இயக்கி உள்ளனர். இதில் பிரசன்னா, பிரியா பவானி சங்கர், நாசர், நட்டி நட்ராஜ், குரு சோமசுந்தரம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இதுதவிர பரத் நடித்துள்ள 6 ஹவர்ஸ், புதுமுக நடிகர்களின் படங்களான மாயத்திரை, துரிதம், கடைசி நொடிகள் ஆகிய படங்களும் ஆகஸ்ட் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளன.
இதையும் படியுங்கள்... அன்புச்செழியனை தொடர்ந்து 4 முன்னணி பட தயாரிப்பாளர்களை ரவுண்ட் கட்டும் ஐடி ரெய்டு.. யார் யார் தெரியுமா?