அன்புச்செழியனை தொடர்ந்து 4 முன்னணி பட தயாரிப்பாளர்களை ரவுண்ட் கட்டும் ஐடி ரெய்டு.. யார் யார் தெரியுமா?

சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

IT Raid on 4 Leading Film Producers Locations

தமிழ் சினிமாவில் முன்னணி பட தயாரிப்பாளர்களான கலைப்புலி தாணு, ஞானவேல் ராஜா, எஸ்ஆர்.பிரபு, சத்யஜோதி தியாகராஜன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் அன்புசெழியன். இவர் திரைப்படங்களை தயாரிப்பது, ரிலீசாகும் படத்தை வாங்கி விநியோகிப்பது மற்றும் திரைப்பட பைனான்சியராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு சொந்தமான சென்னை, மதுரை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிலையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க;- சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!

IT Raid on 4 Leading Film Producers Locations

இந்நிலையில் சென்னை, தி.நகர் பிரகாசம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நடிகர் சூர்யாவின் உறவினரும் தயாரிப்பாளருமான கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, மன்னார், சத்யஜோதி தியாகராஜன், சீனு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. 

இதையும் படிங்க;-  உதயநிதியால் மீண்டும் உயிர்பெறும் விக்ரமின் துருவ நட்சத்திரம்..! மாஸான போட்டோவுடன் கவுதம் மேனன் கொடுத்த அப்டேட்

IT Raid on 4 Leading Film Producers Locations

கலைப்புலி தாணு அசுரன், கர்ணன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல், வெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படங்களை தயாரித்து வருகிறார். எஸ்.ஆர். பிரபு கைதி, என்ஜிகே உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். மேலும்,  சில தயாரிப்பாளர்கள் பெயரும் வருமான வரித்துறை சோதனை பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios