2024ல் திருமண பந்தத்தில் இணைந்த பிரபல ஜோடிகள்!
சோனாக்ஷி சின்ஹா-ஜாகீர் இக்பால் முதல் நாக சைதன்யா-சோபிதா வரை, 2024 ஆம் ஆண்டு பல பிரம்மாண்டமான திருமணங்களை கண்டுள்ளது. இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த 10 பிரபல ஜோடிகளை இங்கே காணலாம்.
சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால், நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா, ரகுல் ப்ரீத் சிங்-ஜாக்கி பக்னானி, புல்கித் சம்ராட்-கிருத்தி கர்பந்தா மற்றும் இரா கான்-நுபுர் சிகாரே போன்ற நட்சத்திர ஜோடிகள், 2024-ல் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி: பிப்ரவரி 21, 2024 அன்று கோவாவில் ஒரு உள்ள கடற்கரையை ஒட்டி இருந்த நட்சத்திர விடுதியில் திருமணம் செய்து கொண்டனர். இதில் இருவருக்கும் நெருக்கமான சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த திருமணங்களில் ஒன்றாகவும் இது இருந்தது.
புல்கித் சம்ராட் மற்றும் கிருத்தி கர்பந்தா: மார்ச் 15, 2024 அன்று குர்கானில் இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட திருமண கொண்டாட்ட நிகழ்வாக இது இருந்தது.
சுர்பி சந்தனா மற்றும் கரண் சர்மா புல்கித்: மார்ச் 15, 2024 அன்று, ஜெய்ப்பூரில் திருமணம் செய்து கொண்டனர். பாரம்பரிய முறையின்படி இவர்களுடைய திருமணம் வெகு விமர்சியாக நடந்து முடிந்தது.
இரா கான் மற்றும் நுபுர் சிகாரே: பிப்ரவரி 20, 2024 அன்று கோவாவில் ஒரு அழகான கடற்கரையில் மிக பிரமாண்டமாக இவர்கள் திருமணம் நடந்தது, இதில் ஏராளமான பிரபலங்களும் கலந்து கொண்டு இந்த ஜோடிகளை வாழ்த்தினர்.
சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பாலின் திருமணம் ஏப்ரல் 22, 2024 அன்று மும்பையில் நடந்தது. பாலிவுட் திரையுலகில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இவர்களின் திருமணத்தில் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா: டிசம்பர் 4, 2024 அன்று இவர்களின் திருமணம் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடந்தது. குறிப்பிட்ட பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொள்ள இந்த திருமணம் விமர்சியாக நடந்து முடிந்தது.
ஹிமான்ஷ் கோலி மற்றும் வினி கோலி, இவர்களின் திருமணம் நவம்பர் 12, 2024 அன்று நடந்து, இந்த இளம் ஜோடிகளின் திருமணத்தில் நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர் என்பது குறிபிடத்தக்கது.
ராதிகா மெர்ச்சண்ட் - ஆனந்த் அம்பானி: இந்தியாவே பார்த்து வியக்கும் வகையில் சுமார் 5000 கோடி செலவில் நடந்த இந்த திருமணத்தில் ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகமே திரண்டு வந்து கலந்து கொண்டு சிறப்பித்தது.