- Home
- Business
- Vegetable Price: வானிலையால் சட்டென்று மாறிய காய்கறிகள் விலை.! வெங்காயம், தக்காளி ரேட் தெரியுமா?
Vegetable Price: வானிலையால் சட்டென்று மாறிய காய்கறிகள் விலை.! வெங்காயம், தக்காளி ரேட் தெரியுமா?
கனமழையால் வரத்து குறைந்ததாலும், பண்டிகை கால தேவை அதிகரித்ததாலும் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை கிலோ ₹150-ஐ தாண்டியுள்ள நிலையில், சீசன் இல்லாததால் முருங்கைக்காய் கிலோ ₹600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி விலை கொஞ்சம் உயர்வு
கனமழையால் வரத்து குறைந்ததால், சென்னை கோயம் பேடு சந்தையில் காய்கறிகள் விலை உச்சத்தை தொட்டுள்ளது. கார்த்திகை மாற்றும் சபரிமலை விரதம் காரணமாகவும் சைவ சாப்பாடு தேவை அதிகரித்துள்ளதால் வெங்காயம் தக்காளி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.
வெங்காயம் தக்காளி விலை இதுதான்
15 நாட்களுக்கு முன் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ தக்காளி, தற்போது கோயம்பேடு சந்தையில், அதாவது மொத்த விலையில் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது சில்லவரை விலையில் 150 ரூபாயை தாண்டியுள்ளதாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெங்காயம் விலை மொத்த விலையில் கிலோ 45 ரூபாய்க்கும் சில்லரை விலையில் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறுயுள்ளனர்.
நாட்டு காய்கறிகள் விலை தெரியுமா?
பட்டாணி, பட்டர் பீன்ஸ், டபுள் பீன்ஸ் போன்ற புரதம் நிறைந்த காய்கறிகள் விலை 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகின்றன. சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் கிலோ 40 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கின்றன. புடலங்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய் போன்ற பொதுவான காய்கறிகள் 40 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையில் விற்பனை செய்யப்படும் முருங்கைக்காய்
நெல்லிக்காய் ரூ.230 – ரூ.290 வரை உயர்ந்த விலையில் காணப்படுகிறது. அதேபோல் பூண்டு விலையும் அதிகரித்த நிலையில் ரூ.350 – ரூ.520 வரை உள்ளது. வெள்ளரிக்காய், சுரைக்காய், சௌ சௌ, வாழைத்தண்டு போன்ற எளிமையான காய்கறிகள் 50 ரூபாய் முதல் 90 ரூபாய் வரையிலும் கிடைக்கிறது. முருங்கைக்காய் மட்டும் அன் சீசன் காரணமாக கிலோ 600 ரூபாய் விலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

