- Home
- Business
- Business: ரூ.10 ஆயிரம் முதலீட்டில் மாதம் ரூ.80 ஆயிரம் வரை வருமானம்.! பெண்களுக்கு கைகொடுக்கும் இந்த தொழில் பற்றி தெரியுமா?
Business: ரூ.10 ஆயிரம் முதலீட்டில் மாதம் ரூ.80 ஆயிரம் வரை வருமானம்.! பெண்களுக்கு கைகொடுக்கும் இந்த தொழில் பற்றி தெரியுமா?
காளான் வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய ஒரு சிறந்த தொழில். உழைப்பும், சரியான பயிற்சியும் இருந்தால், மாதம் ரூ.80,000 வரை வருமானம் ஈட்டி, பெண்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும்.

வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஆசையா?
வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஆசையா? உழைப்பும், நேர்மையும் இருந்தால் இந்த தொழில் ஒருவரை சாதனையாளராக உருவாக்கும். கணவன்–மனைவி சேர்ந்து வேலை பார்க்கும் குடும்பங்களுக்கு இது சொந்தமான வருமானமாக மாறிவிடும். ஆமாம்… காளான் வளர்ப்பு என்பது சாதாரண தொழில் இல்லை. உழைக்கும் பெண்களுக்கு வாழ்க்கையை மாற்றி அமைக்க கூடிய ஒரு பொக்கிஷம்!
இடம், முதலீடு தேவையில்லை
காளான் வளர்ப்புக்கு பெரிய நிலம், காசு அல்லது அனுபவம் எதுவும் தேவை இல்லை. 300–400 சதுர அடியில் கூட இந்த தொழிலை ஆரம்பிக்க முடியும். ஆரம்பத்தில் இலவச பயிற்சி வகுப்புகள், வேளாண் அறிவியல் மைய உதவி, அரசு மூலம் கடனுதவி போன்ற பல வாய்ப்புகள் கிடைக்கின்றன. சரியான முறையில் விதை, வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தெரிந்தால் அதிக லாபம் கிடைக்கும்.
மாதம் ரூ.80,000 வரை வருமானம் பெற முடியும்
இன்றைய காலத்தில் பெண்கள் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய தொழில்கள் அதிகம். அதில் கண்கவர் சாதனை படைத்திருக்கும் ஒரு சிறந்த தொழில் காளான் வளர்ப்பு. இந்த தொழிலை 10,000 ரூபாய் முதல் முதலீட்டில் தொடங்கி, மாதம் ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை வருமானம் பெற முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.
ஒரு கிலோ காளானுக்கு 200 ரூபாய் வரை விலை கிடைக்கும்
காளான் வளர்ப்பில் சிப்பிக் காளான், பால் காளான் போன்ற பல வகைகள் உள்ளன. இது வீட்டு உணவு, ஹோட்டல்கள் மற்றும் மார்க்கெட்டில் அதிக தேவை கொண்டது. ஒரு கிலோ காளானுக்கு 200 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. ஒரு சிறிய பண்ணையில் ஒரு நாளுக்கு 15–20 கிலோ வரை உற்பத்தி செய்யலாம். அப்படியாக கணக்கிட்டால் தினமும் 3,000–4,000 ரூபாய் வருமானமும், மாதம் 70,000–80,000 ரூபாய் வருமானமும் சம்பாதிக்க முடியும்.
காளான் வளர்ப்பின் ஒரு பெரிய நன்மை என்ன தெரியுமா? இதில் பெண்கள் வீட்டைப் பார்த்துக்கொண்டே வேலை செய்ய முடியும். உற்பத்தி செய்யும் காளான்களுக்கு கூடுதல் மதிப்புக் கூட்டி விற்பனை செய்யலாம். உதாரணத்திற்கு, காளான் சூப் மிக்ஸ், ஊறுகாய், தொக்கு, காயவைத்த காளான் போன்றவை அதிக பலனை தரும்.
இந்த தொழிலின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா?
முக்கியமாக, இந்த தொழிலை ஆரம்பிக்கும் போது சில சிரமங்கள் இருக்கும். பூஞ்சை தாக்குதல், விதை தரம் குறைவு போன்றவை வரும். ஆனால் சரியான முறையில் கற்றுக்கொண்டால் இந்த தொழில் நம்மை ஒருபோதும் ஏமாற்றாது.
பலரும் இந்த தொழிலில் பயிற்சி பெற்று இன்று தங்களின் சொந்த பண்ணை, மார்க்கெட்டிங், விற்பனை எல்லாம் செய்து வருகிறார்கள். அரசு திட்டங்கள், வேளாண் நிபுணர் ஆலோசனை, மற்றும் பெண்கள் சுய உதவி குழு உதவி போன்றவையும் சேர்ந்து வந்தால் இந்த தொழில் மேலும் வளர்ச்சி பெற்றுவிடும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

