- Home
- Business
- Free Training: Business தொடங்க போறீங்களா?! 7 தொழில்களை இலவசமாக கற்கலாம்.! எங்கு, எப்போது தெரியுமா?!
Free Training: Business தொடங்க போறீங்களா?! 7 தொழில்களை இலவசமாக கற்கலாம்.! எங்கு, எப்போது தெரியுமா?!
கோவையில் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய 7 சிறந்த தொழில்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில், தொழில் தொடங்குவது, சந்தைப்படுத்துதல் கடன் உதவிகள் குறித்தும் விளக்கப்படும்.

இலவசமாக பயிற்சி பெற ஒரு சிறப்பு வாய்ப்பு
பெண்கள் குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே தொடங்கக்கூடிய சிறந்த 7 தொழில்களுக்கு இலவசமாக பயிற்சி பெற ஒரு சிறப்பு வாய்ப்பு கோயம்புத்தூரில் உருவாகியுள்ளது. Entrepreneurship Development Institute of India மற்றும் Accenture இணைந்து நடத்தும் இந்த குறுதொழில் முன்னேவர் இலவச பயிற்சி நிகழ்ச்சியில், 18 முதல் 45 வயதுக்குள் உள்ள பெண்கள் பங்கேற்கலாம்.
7 தொழில்களை இலவசமாக கற்கலாம்
மொத்தம் 26 வேலை நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி நவம்பர் 28, 2025 முதல் தொடங்குகிறது. நுண்கீரைகள் வளர்ப்பு, சிறுதானிய மற்றும் மதிப்பூக்கப்பட்ட பாரம்பரிய அரிசி உணவுகள், காய்கறி பதப்படுத்துதல், ஊறுகாய் வகைகள், சிறுதானிய மிட்டாய் மற்றும் கேக் வகைகள், ஸ்க்வாஷ்–ஜாம்–நெல்லி பொடி, கேக் தயாரிப்பு, சிறுதானிய ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகள் உள்ளிட்ட பல தொழில்களில் நுணுக்கமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடன் உதவிகள் மற்றும் நிதிமேலாண்மை
அத்துடன் வணிக யோசனை உருவாக்கம், நிறுவனத் தொடங்குவது எப்படி, தொழில்–திறன்–சுயதொழில் பயிற்சி, சந்தைப்படுத்தல் முறைகள், கடன் உதவிகள், நிதி மேலாண்மை போன்ற முக்கிய பகுதிகளிலும் பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சி நடைபெறும் இடம்
பயிற்சி நடைபெறும் இடத்தை தெரிஞ்சுக்கிட்டு பத்திரமா போய் கத்துக்கிட்டு வாங்க. இராமசாமி சிந்தம்மாள் அறக்கட்டளை, 29 வள்ளலார் தெரு, ராமநாதபுரம், கோயம்புத்தூர்–641041.
ஆதார் இருந்தா போதும்!
சேர விரும்பும் பெண்கள் தங்கள் பெயர், வயது, தொலைபேசி எண், ஆதார் எண் ஆகியவற்றை கீழ்காணும் எண்களுக்கு தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்: 99944 44010, 99447 99995, 88258 12528.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

