MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Railway Fine: லேடீஸ் கோச்சில் ஆண்கள் ஏறினால் ரூ.2,500 அபராதம்! இனி இதுதான் ரூல்ஸ்!

Railway Fine: லேடீஸ் கோச்சில் ஆண்கள் ஏறினால் ரூ.2,500 அபராதம்! இனி இதுதான் ரூல்ஸ்!

Railway Fine: ரயிலில் பயணம் செய்பவர்கள் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய விதி ஒன்று மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அதை மீறினால் அபராதம் மட்டுமல்ல, சட்ட நடவடிக்கையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 22 2026, 11:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரயிலில் பயணம் செய்பவர்களே கவனம்
Image Credit : our own

ரயிலில் பயணம் செய்பவர்களே கவனம்

ரயில்களில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகள் மற்றும் இருக்கைகளில் சட்டவிரோதமாக நுழையும் ஆண் பயணிகளுக்கு எதிராக இந்திய ரயில்வே கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. 'ஜன் விஸ்வாஸ் சட்டம், 2026'-ன் கீழ், பெண்கள் பெட்டியில் அத்துமீறி நுழைபவர்களுக்கான அபராதத்தை 500 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
புதிய விதி தெரியாமல் இருந்தால் அபராதம்
Image Credit : google

புதிய விதி தெரியாமல் இருந்தால் அபராதம்

பொதுப் பெட்டிகளில் பயணிகளுக்குப் போதுமான இடவசதி உள்ளது என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படி இருக்கும்போது, ஆண்கள் பெண்கள் பெட்டியையோ அல்லது இருக்கைகளையோ ஆக்கிரமிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்ந்து நடப்பதால், அபராதத் தொகையை கடுமையாக உயர்த்த முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Related image1
Indian Railways Child Ticket: 5 வயது வரை ரயிலில் டிக்கெட் தேவையில்லையா? பெற்றோருக்கே தெரியாத ரயில்வே விதி
Related image2
Railways Fare Discount: ரயில் கட்டணத்தில் 75% வரை தள்ளுபடி.. இந்த பயணிகளுக்கு மட்டும் சூப்பர் சலுகை!
36
ரயில்வே அமைச்சகம்
Image Credit : our own

ரயில்வே அமைச்சகம்

ரயில்வே அமைச்சகம் 2026, ஜூன் 19 அன்று இந்திய அரசிதழில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, எந்தவொரு ஆண் பயணியும் வேண்டுமென்றே பெண்கள் பெட்டிக்குள் நுழைந்தாலோ அல்லது பெண்கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தாலோ அது சட்டப்படி குற்றமாகும். இது ரயில்வே சட்டத்தின் பிரிவு 162-ஐ மீறும் செயலாகும்.
46
ரயில்வே அபராதம்
Image Credit : Gemini AI

ரயில்வே அபராதம்

விதியை மீறும் பயணிக்கு 2,500 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், அவரது டிக்கெட்டை ரத்து செய்யவும் அல்லது பறிமுதல் செய்யவும் முடியும். அதுமட்டுமின்றி, அந்தப் பயணியை ரயிலில் இருந்து கீழே இறக்கிவிடும் அதிகாரம் ரயில்வே ஊழியர்களுக்கு உள்ளது. ஒருவேளை, பயணி அபராதம் கட்ட மறுத்தால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள். அப்போது அபராதத் தொகை 5,000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது என அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
56
2,500 ரூபாய் அபராதம்
Image Credit : Twitter

2,500 ரூபாய் அபராதம்

இந்தக் குற்றத்திற்கு குறைந்தபட்சம் 2,500 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஒருவேளை, சிறப்புச் சூழ்நிலைகளில் இதைவிடக் குறைவான அபராதம் விதித்தால், அதற்கான சரியான காரணத்தை நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஆனால், இந்த விதி திருநங்கைகளுக்குப் பொருந்தாது. 'திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்'-ன் கீழ் வரும் நபர்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
66
இந்திய ரயில்வே நடவடிக்கை
Image Credit : Asianet News

இந்திய ரயில்வே நடவடிக்கை

பெண்களின் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வே இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. பெண்கள் பெட்டிகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பெண் பயணிகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதும் இந்தக் கடுமையான விதியின் முக்கிய நோக்கமாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
தொடர்வண்டிப் போக்குவரத்து
இந்திய இரயில்வே
பயணம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bike Loan Tips: ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் சம்பளம் வரை.. எந்த பைக் வாங்கலாம்? முழு பட்டியல்!
Recommended image2
LPG Gas: ஜூன் 30-க்குள் இதை செய்யலைனா சிலிண்டர் கட்? மத்திய அரசின் புதிய ரூல்ஸ் இதோ!
Recommended image3
Best Money Savings : வேலையே பாக்காம வட்டி பணத்திலேயே ஜாலியாக வாழ்வது எப்படி? இதுல முதலீடு பண்ணுங்க!
Related Stories
Recommended image1
Indian Railways Child Ticket: 5 வயது வரை ரயிலில் டிக்கெட் தேவையில்லையா? பெற்றோருக்கே தெரியாத ரயில்வே விதி
Recommended image2
Railways Fare Discount: ரயில் கட்டணத்தில் 75% வரை தள்ளுபடி.. இந்த பயணிகளுக்கு மட்டும் சூப்பர் சலுகை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved