MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • LPG Gas: ஜூன் 30-க்குள் இதை செய்யலைனா சிலிண்டர் கட்? மத்திய அரசின் புதிய ரூல்ஸ் இதோ!

LPG Gas: ஜூன் 30-க்குள் இதை செய்யலைனா சிலிண்டர் கட்? மத்திய அரசின் புதிய ரூல்ஸ் இதோ!

LPG Gas: உங்கள் வீட்டில் LPG மற்றும் PNG என இரண்டு கேஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளதா? ஜூன் 30-க்கு பிறகு உங்கள் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படலாம். மத்திய அரசின் இந்த புதிய விதிமுறை குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 22 2026, 08:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கேஸ் சிலிண்டர் விதிமுறை
Image Credit : Chat gpt

கேஸ் சிலிண்டர் விதிமுறை

இந்தியாவில் LPG Gas எனப்படும் சமையல் எரிவாயு மிகவும் அத்தியாவசிய தேவையாக உள்ளது. வீடுகள் முதல் ஹோட்டல்கள் வரை சமையம் எரிவாயு தான் முக்கிய பயன்பாடாக உள்ளது. இந்த நிலையில், எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம் நிலவியபோது, இந்தியாவில் எரிபொருள் மற்றும் கேஸ் சிலிண்டர்களுக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த நேரத்தில், கேஸ் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்கவும், தகுதியானவர்களுக்கு தடையின்றி கேஸ் கிடைக்கவும் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
PNG கேஸ், LPG கேஸ் என இரண்டும் இருக்கா?
Image Credit : social media

PNG கேஸ், LPG கேஸ் என இரண்டும் இருக்கா?

அதன் ஒரு பகுதியாக, ஒரே வீட்டில் பைப்லைன் மூலம் வரும் PNG கேஸ் மற்றும் சிலிண்டரான LPG கேஸ் என இரண்டு இணைப்புகளையும் வைத்திருப்பவர்கள், LPG இணைப்பை சரண்டர் செய்ய வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டது. இதற்காக 90 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது. இதற்கிடையே மார்ச் 2026-ல், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

அதாவது 'தேசிய பைப் இயற்கை எரிவாயு இயக்கம் 2.0' (National Pipe Natural Gas Drive 2.0) என்ற திட்டத்தின் கீழ் இந்த உத்தரவு வெளியிடப்பட்டது. இதன்படி, ஒரு குடும்பம் ஒரே நேரத்தில் LPG மற்றும் PNG என இரண்டு இணைப்புகளையும் வைத்திருக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. ஒரே வீட்டில் இரண்டு இணைப்புகளையும் வைத்திருப்பதற்கு அரசு தடை விதித்தது.

Related Articles

Related image1
LPG Cylinder Subsidy: சிலிண்டர் விலையில் ரூ.1,000 மானியம்.. யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்!
Related image2
LPG Subsidy: சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட்! ஜூன் 30-க்குள் இதை செய்யாட்டி மானியம் கட்?
34
 LPG இணைப்பை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்
Image Credit : ANI

LPG இணைப்பை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்

மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவுக்கு 90 நாட்கள் கெடு விதிக்கப்பட்டது. இந்த கெடு, வரும் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூன் 30-க்குப் பிறகு, PNG மற்றும் LPG என இரண்டு இணைப்புகளையும் வைத்திருக்கும் வீடுகளுக்கு LPG சிலிண்டர் விநியோகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். உங்களிடம் ஏற்கனவே PNG இணைப்பு இருந்து, நீங்கள் இன்னும் LPG சிலிண்டரையும் பயன்படுத்திக் கொண்டிருந்தால், உங்கள் LPG இணைப்பை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

44
இந்த வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம்
Image Credit : Getty

இந்த வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம்

ஆனால், உங்கள் பகுதியில் இன்னும் PNG விநியோகம் தொடங்கப்படவில்லை என்றால், உங்கள் LPG இணைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாது. உங்கள் பகுதிக்கு PNG விநியோகம் வரும் வரை, LPG சிலிண்டர் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும். எனவே, இதுகுறித்து வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எரிவாயு உருளை
வாயு உருளை

Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி சிலிண்டர் தூக்க கஷ்டம் இல்லை! Bharatgas 'Light Zip' சேவை தொடக்கம்: புக் செய்ததும் உடனடி சிலண்டர்
Recommended image2
வெறும் ரூ.50000 முதலீட்டில் செம்ம லாபம்.. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் 5 தொழில் வாய்ப்புகள்!
Recommended image3
Pawned Gold: அடகு வைத்த நகையை ஈசியாக மீட்கலாம்! வட்டி கட்டி கஷ்டப்பட வேண்டாம்!
Related Stories
Recommended image1
LPG Cylinder Subsidy: சிலிண்டர் விலையில் ரூ.1,000 மானியம்.. யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்!
Recommended image2
LPG Subsidy: சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட்! ஜூன் 30-க்குள் இதை செய்யாட்டி மானியம் கட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved