MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • LPG Subsidy: சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட்! ஜூன் 30-க்குள் இதை செய்யாட்டி மானியம் கட்?

LPG Subsidy: சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட்! ஜூன் 30-க்குள் இதை செய்யாட்டி மானியம் கட்?

LPG Subsidy: சிலிண்டர் வாடிக்கையாளர்கள் ஜூன் 30‍ம் தேதிக்குள் e-KYCசெய்யவில்லை என்றால் மானியம் ரத்தாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தே இ-கேஒய்சி செய்வது எப்படி? செய்யலாம் என பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 15 2026, 06:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு
Image Credit : Gemini AI

எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக சவால்களை கருத்தில் கொண்டு, எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை முறைப்படுத்தவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் பயோமெட்ரிக் முறையிலான ஆதார் இ-கேஒய்சி சரிபார்ப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

முன்னதாக, பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா (PMUY) திட்டப் பயனாளிகளுக்கு இது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதுவரை இ-கேஒய்சி செய்யாத அனைத்து எல்பிஜி வாடிக்கையாளர்களும் இந்தச் செயல்முறையை முடிக்க வேண்டும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கனவே இ-கேஒய்சி செய்துள்ள பொதுவான வாடிக்கையாளர்கள் (Non-PMUY) இதனை மீண்டும் செய்யத் தேவையில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வீட்டில் இருந்தபடியே இ-கேஒய்சி செய்வது எப்படி?
Image Credit : Getty

வீட்டில் இருந்தபடியே இ-கேஒய்சி செய்வது எப்படி?

அதே வேளையில் ஜூன் 30-க்குள் இந்தச் சரிபார்ப்பை முடிக்காவிட்டால், இண்டேன் (Indane), பாரத் (Bharat), மற்றும் ஹெச்பி (HP) கேஸ் வாடிக்கையாளர்களின் மானியம் நிறுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்தே இ-கேஒய்சி செய்வது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.

இண்டேன், பாரத் மற்றும் ஹெச்பி என மூன்று முக்கிய கேஸ் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் தங்களின் மொபைல் செயலி மூலமாகவே இந்தச் செயல்முறையை எளிதாக முடிக்கலாம்.

Related Articles

Related image1
LPG Subsidy: எல்பிஜி கேஸ் மானியம் இனிமேல் எல்லோருக்கும் கிடையாது: ஷாக் அளித்த மத்திய அரசு
Related image2
LPG Cylinder Subsidy: சிலிண்டர் விலையில் ரூ.1,000 மானியம்.. யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்!
35
இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் இ-கேஒய்சி செய்வது எப்படி?
Image Credit : Getty

இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் இ-கேஒய்சி செய்வது எப்படி?

* முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து 'IndianOil One' செயலி மற்றும் 'AadhaarFaceRD' செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

* 'IndianOil One' செயலியைத் திறந்து, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு கணக்கைத் தொடங்கவும் (Sign up).

* உங்களது கேஸ் ரசீதில் உள்ள 16 இலக்க எல்பிஜி ஐடியை (LPG ID) இதனுடன் இணைத்தால், உங்களது பயனர் விவரங்கள் திரையில் தோன்றும்.

* முகப்புப் பக்கத்தில் உள்ள 'My Profile' பகுதிக்குச் செல்லவும்.

* விவரங்களைச் சரிபார்த்துவிட்டு, 're-KYC' என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

* திரையில் தோன்றும் நிபந்தனைகளைப் படித்துப் பார்த்து உங்களது ஒப்புதலை வழங்கவும்.

* 'Face Scan' பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் 'AadhaarFaceRD' செயலி வழியாக முகத்தை ஸ்கேன் செய்து சரிபார்ப்பை முடிக்கலாம். (குறிப்பு: உங்களது ஆதார் பயோமெட்ரிக் லாக் செய்யப்பட்டிருந்தால், முதலில் அதை அன்லாக் செய்ய வேண்டும்).

45
பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் இ-கேஒய்சி செய்வது எப்படி?
Image Credit : Getty

பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் இ-கேஒய்சி செய்வது எப்படி?

* முதலில் உங்களது மொபைலில் 'Hello BPCL' செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

* செயலியைத் திறந்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டுப் பதிவு செய்யவும்.

* முகப்புப் பக்கத்தில் உள்ள 'e-KYC' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

* உங்களது மொபைல் எண்ணிற்கு வரும் 6 இலக்க ஓடிபி (OTP) எண்ணை உள்ளிட்டுச் சரிபார்க்கவும்.

* விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்து ஒப்புதல் அளிக்கவும்.

* 'Proceed' என்பதைக் கிளிக் செய்து, முக அங்கீகார (Face Authentication) செயல்முறையை நிறைவு செய்யவும்.

55
ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் இ-கேஒய்சி செய்வது எப்படி?
Image Credit : X

ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் இ-கேஒய்சி செய்வது எப்படி?

* உங்களது மொபைலில் 'HP Pay' மற்றும் 'AadhaarFaceRD' ஆகிய செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவும்.

* 'HP Pay' செயலியைத் திறந்து, கேஸ் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டுப் பதிவு செய்யவும்.

* மொபைலுக்கு வரும் ஓடிபி (OTP) மூலம் சரிபார்ப்பை முடிக்கவும்.

* பாதுகாப்பான அணுகலுக்கு 4 இலக்க எம்பிஐஎன் (MPIN) குறியீட்டை உருவாக்கவும்.

* எம்பிஐஎன் மூலம் லாகின் செய்து, லொகேஷன் (Location) அனுமதியை வழங்கவும்.

* 'MY HP' பகுதிக்குச் சென்று 'LPG' என்பதைத் தேர்வு செய்யவும்.

* அங்குள்ள 'e-KYC' ஆப்ஷனைக் கிளிக் செய்து, நிபந்தனைகளைப் படித்து ஒப்புதல் அளிக்கவும்.

* 'Capture Face' என்பதைக் கிளிக் செய்யும்போது, 'AadhaarFaceRD' செயலி இயங்கத் தொடங்கும்.

* திரையில் காட்டும் அறிவுறுத்தல்களின்படி உங்களது முகத்தை ஸ்கேன் செய்து இ-கேஒய்சி செயல்முறையை வெற்றிகரமாக முடிக்கலாம்.

முக்கிய குறிப்பு: மொபைல் செயலி தவிர, வாடிக்கையாளர்கள் தங்களின் கேஸ் விநியோகஸ்தர் (Distributor) அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் மூலமாகவோ இந்த இ-கேஒய்சி சரிபார்ப்பை இலவசமாக செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எரிவாயு உருளை
வாயு உருளை
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Elon Musk: உலகின் முதல் ட்ரில்லியனர் ஆனார் எலான் மஸ்க்; இவரோட சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Recommended image2
RBI Holiday Calendar: ஜூன் 15 முதல் 21 வரை வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை? ஆர்பிஐ வெளியிட்ட பட்டியல்
Recommended image3
PPF Investors: பிபிஎஃப் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை.. இந்த விதிகளை மீறினால் நஷ்டம் உறுதி!
Related Stories
Recommended image1
LPG Subsidy: எல்பிஜி கேஸ் மானியம் இனிமேல் எல்லோருக்கும் கிடையாது: ஷாக் அளித்த மத்திய அரசு
Recommended image2
LPG Cylinder Subsidy: சிலிண்டர் விலையில் ரூ.1,000 மானியம்.. யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved