Asianet News TamilAsianet News Tamil

LPG Subsidy: எல்பிஜி கேஸ் மானியம் இனிமேல் எல்லோருக்கும் கிடையாது: ஷாக் அளித்த மத்திய அரசு

LPG Subsidy;வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கான மானியம் அனைத்துக் குடும்பங்களுக்கும் இனி தரப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

LPG Subsidy: LPG subsidy limited, Rs 200 dole for Ujjwala beneficiaries: Official
Author
New Delhi, First Published Jun 3, 2022, 10:11 AM IST

வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கான மானியம் அனைத்துக் குடும்பங்களுக்கும் தரப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள 9 கோடி ஏழைப் பெண்கள் மற்றும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக இணைப்பு பெற்றவர்கள் ஆகியோருக்கு மட்டும் மானியம் வழங்கப்படும். மற்றவர்கள் சந்தை விலையில் வெளியே வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது

LPG Subsidy: LPG subsidy limited, Rs 200 dole for Ujjwala beneficiaries: Official

உஜ்வாலா திட்டம்

மத்திய பெட்ரோலியத்துறை செயலாளர் பங்கஜ் ஜெயின் நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது

“ 2020ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம் தரப்படவில்லை. மார்ச் 21ம் தேதி மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவி்த்ததுபோல் உஜ்வாலா திட்டத்தில் இலவச கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு மட்டுமே மானியம் தரப்படுகிறது.

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 21ம் தேதி அறிவித்ததுபோல், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200 வீதம் 12 மாதங்களுக்கு மானியம் வழங்கப்படும். சமையல் சிலிண்டர் விலை கடுமையாக அதிகரித்து வரும்நிலையில் இந்த மானியம் அவர்களுக்கு சமாளிக்க உதவும்”

இவ்வாறு ஜெயின் தெரிவித்தார்

LPG Subsidy: LPG subsidy limited, Rs 200 dole for Ujjwala beneficiaries: Official

சந்தை விலை

14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலை வெளிச்சந்தையில் ரூ.1003க்கு விற்கப்படுகிறது. இதில் உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.200 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்பட்டத்தில் அவர்களுக்கு 803 ரூபாய்க்கு சிலிண்டர் கிடைக்கும். இந்த மானியத்துக்காக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,100 கோடி செலவாகும்.

மானியம் நிறுத்தம்

பெட்ரோலுக்கான மானியத்தை மத்திய அரசு கடந்த 2010 ஜூன் மாதம் நிறுத்தியது, டீசலுக்கான மானியத்தை 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்தியது. அடுத்த இரு ஆண்டுகளில் மண்எண்ணெய்க்கான மானியத்தை நிறுத்தியது. இப்போது எல்பிஜி சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் தற்போது முடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 30.50 கோடி எல்பிஜி இணைப்புகள் உள்ளன, இதில் 9கோடிக்கும் அதிகமாக உஜ்வாலா திட்டத்தின் கீழ்வழங்கப்பட்டது.

LPG Subsidy: LPG subsidy limited, Rs 200 dole for Ujjwala beneficiaries: Official

ரூ.200வரை உயர்வு

சிலிண்டர் விலையும் கடந்த ஓர் ஆண்டுக்குள் ஏறக்குறைய ரூ.200 உயர்ந்துவிட்டது. 2021 அக்டோபரிலிருந்து சிலிண்டர் ஒன்றுக்கு ஏறக்குறைய ரூ.200 வரை உயர்ந்துவிட்டது. 2021 ஜூன் மாதம் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.809 இருந்தநிலையில், அடுத்த 4 மாதங்களில் 90ரூபாய் உயர்த்தப்பட்டது.

அதன்பின் 2022 மார்ச் மாதம் ரூ.50, அதன்பின் ரூ.3.50என விலை உயர்ந்தது.  உஜ்வாலா திட்டத்தில் இலவசமாக இணைப்பு பெற்றவர்கள் இலவச சிலிண்டர் பெற்று அது தீர்ந்தவுடன், சிலிண்டர் விலை உயர்வு காரணமாகமறு சிலிண்டர் வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மத்திய  பெட்ரோலியத்துறைஅமைச்சகம் மறத்துவிட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios