- Home
- Business
- துபாயிலிருந்து எவ்வளவு தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வரலாம்.? புதிய ரூல்ஸ்.. மீறினால் அபராதம்.!
துபாயிலிருந்து எவ்வளவு தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வரலாம்.? புதிய ரூல்ஸ்.. மீறினால் அபராதம்.!
துபாயில் தங்கம் விலை மற்றும் மேக்கிங் சார்ஜ் இந்தியாவை விட கணிசமாகக் குறைவாக உள்ளது. இதனால் 20% வரை சேமிக்க முடியும். இந்த வரம்புகளை மீறினால், 2025-க்கான CBIC விதிமுறைகளின்படி குறிப்பிட்ட சுங்க வரி செலுத்த வேண்டும்.

துபாயிலிருந்து தங்கம் வரம்பு
இந்தியர்கள் துபாய்க்கு செல்லும்போது அதிகம் விரும்பிப் பெறும் பொருள் அல்லது வாங்கி வரும் பொருள் என்று தங்கத்தை யோசிக்காமல் சொல்லலாம். காரணம் துபாயில் தங்கம் விலை இந்தியாவை விட குறைவாக இருக்கும். இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமத்திற்கு சுமார் ரூ.12,569, ஆனால் துபாயில் அதே நேரத்தில் அது ரூ.11,800 மட்டுமே. சர்வதேச தங்க சந்தையை நேரடியாக பின்பற்றுவதால், துபாயில் விலை உலக ஸ்பாட் விலைக்கு மிக அருகில் இருக்கும். இதனால் பொதுவாக இந்தியாவை விட சுமார் 10% குறைவான விலையில் கிடைக்கிறது.
துபாய் கோல்ட்
மேலும், தங்க நகைகளில் பொருத்தப்படும் மேக்கிங் சார்ஜ் துபாயில் மிகவும் குறைவு. இந்தியாவில் 8%–25% வரை இருக்கும் மேக்கிங் சார்ஜ், துபாயில் 2%–8% மட்டுமே. இதனால் நகை வாங்குபவர்கள் 20% வரை சேமிக்க முடியும். துபாயின் பிரபலமான Gold Souk சந்தையில் 99.9% சுத்தத்துடன் நகைகள் விற்கப்படுவதால் பில், சான்றிதழ், ஹால் மார்க் என அனைத்தும் கிடைக்கும் என்பது கூடுதல் நன்மை ஆகும். இந்தியாவிற்கு துபாயில் தங்கம் கொண்டு வரும் விதிமுறைகள் பற்றி பலருக்கும் குழப்பம் இருக்கும்.
இந்தியா தங்க இறக்குமதி
2025க்கான CBIC விதிமுறைகளின்படி, ஆண்கள் 20 கிராம் (அதிகபட்சம் ரூ.50,000 மதிப்பு) வரை தங்கத்தை வரி இல்லாமல் கொண்டு வரலாம். பெண்கள் மற்றும் 15 வயதுக்கு குறைவான குழந்தைகள் 40 கிராம் (ரூ.1 லட்சம் வரை மதிப்பு) வரை கொண்டு வரலாம். இதை மீறி கொண்டு வந்தால், அதற்கான கஸ்டம்ஸ் டூட்டி கட்ட வேண்டும். அனுமதி அளவை மீறி தங்கம் கொண்டுவரும் பயணிகள் தரப்படுத்தப்பட்ட சதவீத வரியை செலுத்த வேண்டும்.
தங்கம் டூட்டி ஃப்ரீ வரம்பு
ஆண்களுக்கு 20-50 கிராம் வரை 3%, 50-100 கிராம் வரை 6%, 100 கிராமுக்கு மேல் 10% டூட்டி விதிக்கப்படும். இதே போன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனித்தனி ஸ்லாப் விகிதங்கள் உள்ளன. மேலும், ஒருவர் துபாயில் குறைந்தது 6 மாதங்கள் தங்கியிருந்தால், அதிகபட்சம் 1 கிலோ வரை தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வர அனுமதி உள்ளது; ஆனால் இதற்காக டூட்டி கட்டாயம் செலுத்த வேண்டும். 2025 CEPA ஒப்பந்தத்தின்படி, இந்தியா–ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே தங்க இறக்குமதி விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

