- Home
- Business
- Gold Rate Today (November 19): என்னது, மறுபடியும் முதல்ல இருந்தா?! மீண்டும் விலையேறும் தங்கம்!
Gold Rate Today (November 19): என்னது, மறுபடியும் முதல்ல இருந்தா?! மீண்டும் விலையேறும் தங்கம்!
சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை திடீரென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு சர்வதேச அரசியல் மற்றும் அமெரிக்க சந்தை மாற்றங்கள் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது, இதனால் விசேஷங்களுக்கு தங்கம் வாங்கவிருந்த குடும்பங்கள் கவலையடைந்துள்ளன.

ஆபரணத்தங்கமும் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கமும், வெள்ளியும் கடந்த சில நாட்களாக நிலையாக இருந்த நிலையில், இன்று திடீரென மீண்டும் உயர்வு கண்டுள்ளன. தங்கத்தின் விலை உயர்ந்துவிட்டதால் வரும் வாரங்களில் திருமணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம் போன்ற விசேஷங்கள் வைத்திருக்கும் குடும்பங்கள் கவலைக்குள்ளாகியுள்ளன. ஏற்கனவே பொருட்கள் விலை உயர்வால் தாக்கம் அடைந்த மக்களுக்கு இது மேலும் சுமையாக மாறியுள்ளது.
இன்றைய விலை நிலவரம்
தற்போதைய நிலவரப்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து 11,500 ரூபாயாக உள்ளது. இதனால் ஒரு சவரன் விலை 800 ரூபாய் உயர்ந்து 92,000 ரூபாய் ஆகிவிட்டது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது தங்கம் விலை மொத்தமாக பல ஆயிரம் ரூபாய் உயர்வை சந்தித்துள்ளது. இதேநேரம், வெள்ளி விலையிலும் மாற்றம் பதிவாகியுள்ளது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 173 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1,73,000 ரூபாய் என்ற உயர்ந்த நிலையில் உள்ளது.
விலை உயர்வதற்கு இதெல்லாம் காரணம்
இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சர்வதேச அரசியல் மாற்றங்களும் அமெரிக்க சந்தை இயக்கங்களும் குறிப்பிடப்படுகின்றன. அமெரிக்காவின் வரி விதிப்பில் மாற்றங்கள், நாணய மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், சர்வதேச முதலீட்டாளர்களின் தங்கச் சேர்த்தல் ஆகியவை இந்திய தங்கச் சந்தையை நேரடியாக பாதித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா – சீனா உறவுகள், வர்த்தக கொள்கைகள் போன்றவை தங்கத்தின் விலை மாற்றத்திற்கு முக்கிய பங்காற்றுகின்றன.
இதற்கிடையில் சந்தை நிபுணர்கள், அமெரிக்காவில் வரிவிதிப்பில் தளர்வு அல்லது பொருளாதார ஊக்கத்திட்ட அறிவிப்புகள் வந்தால் தங்க விலை தற்காலிகமாக சரிவை காணலாம் என்றும் கூறுகின்றனர். ஆனால் தற்போதைய சூழலில் தங்கம் மீண்டும் உயர்நிலையிலேயே நீடிக்க வாய்ப்பு அதிகம். எனவே தங்கம் வாங்க திட்டமிடும் மக்கள் விலை மாற்றங்களை கவனித்துக்கொண்டு முடிவு செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்குகின்றனர்.

