- Home
- Spiritual
- Spiritual: வீட்டில் இருக்கும் "தங்கம்" இரட்டிப்பாக இதை மட்டும் செஞ்சா போதும்.! யாருக்கும் தெரியாத தங்கமலை ரகசியம்.!
Spiritual: வீட்டில் இருக்கும் "தங்கம்" இரட்டிப்பாக இதை மட்டும் செஞ்சா போதும்.! யாருக்கும் தெரியாத தங்கமலை ரகசியம்.!
வீட்டில் தங்கம் சேர்வதற்கு அட்சய திருதியை தவிர பரணி, பூரம் போன்ற நட்சத்திர நாட்களில் வாங்குவது சிறந்தது. புதிதாக வாங்கிய தங்கத்தை உப்பில் வைத்து தோஷம் நீக்குவது, தங்க கணபதி வழிபாடு செய்வது போன்ற ஆன்மிக வழிமுறைகள் வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும்.

வீட்டில் தங்கம் பெருகும்
பலரும் வாழ்க்கையில் செல்வம், வளம், அதிர்ஷ்டம் பெருக வேண்டும் என விரும்புகிறோம். அதில் “தங்கம்” என்ற சொல் மீது பலருக்கு தனியாத காதல். நம் வீட்டில் தங்கம் சேர வேண்டும் என்றால் வெறும் கடின உழைப்பால் மட்டும் போதாது. அதற்கும் ஆன்மிக காரணங்களும், சில பழமையான வழிமுறைகளும் இருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றை நாம் கடைப்பிடிக்கலாம். எளிமையாகவும், நம்பிக்கையுடனும்.
எந்த நாளில் தங்கம் வாங்குவது சிறந்தது?
பெரும்பாலானோர் அட்சய திருதியை தங்கம் வாங்கும் நாளாகக் கருதுகின்றனர். ஆனால் அதற்குப் புறம்பாக சில சிறப்பு நாட்களும் உள்ளன. பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் புதன் அல்லது வெள்ளி கிழமைகளில் தங்கம் வாங்கினால், அதிர்ஷ்டம் இரட்டிப்பு ஆகும் என நம்பப்படுகிறது. இந்த நாட்களில் வாங்கும் தங்கம், வீட்டில் வளமும் நிதியோட்டமும் கூட்டும்.
தங்கத்தின் தோஷம் நீக்குவதற்கான எளிய முறை
புதிதாக வாங்கிய தங்கத்தை வீட்டிற்கு கொண்டு வந்தவுடன், அதை ஒரு சுத்தமான வெள்ளை துணியிலோ அல்லது வெள்ளை காகிதத்திலோ சுற்றி சிறிது நேரம் உப்பில் புதைத்து வைக்கவும். இது தங்கத்தில் இருக்கக்கூடிய நெகட்டிவ் எனர்ஜியை நீக்கி, அதிர்ஷ்ட சக்தியை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
தங்க கணபதி வழிபாடு
பழங்காலத்தில் நம் முன்னோர்கள் சனிக்கிழமை, ரோகிணி நட்சத்திரம், அமிர்தயோகம் மூன்றும் ஒரே நாளில் வரும் பொழுது, அதனை தங்க கணபதி தினம் எனக் கொண்டாடினர். அன்று காலை எழுந்து குளித்துவிட்டு, வீட்டிலோ அல்லது கோவிலிலோ “ஓம் தங்க கணபதி வஸ்ய வஸ்ய நம” என்று 108 முறை ஜெபம் செய்ய வேண்டும். பிறகு அந்த நாளில் தங்கம் வாங்கினால், அந்த தங்கம் செல்வத்தையும் சமாதானத்தையும் கூட்டும் என நம்பப்படுகிறது
ஜோதிட ரீதியான நேரங்கள்
ஜோதிட ரீதியாக, லக்கினத்தில் குரு, 10ஆம் வீட்டில் சந்திரன், 11ஆம் வீட்டில் புதன் போன்ற அமைப்புகள் இருக்கும் நாட்களில் தங்கம் வாங்கினால், அந்த வீட்டில் தங்கம் தங்குவதோடு மட்டும் இல்லாமல், வருமான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
தங்கம் என்பது அதிர்ஷ்டம், ஆன்மீக சக்தி, செல்வத்தின் அடையாளம்
தங்கம் என்பது செல்வத்தின் அடையாளம் மட்டுமல்ல; அது நம்பிக்கை, அதிர்ஷ்டம், ஆன்மீக சக்தி என அனைத்தையும் ஒருங்கே கொண்டது. நம் நம்பிக்கையுடன் செய்யப்படும் சிறு வழிபாடுகளும், நேர்த்தியான சடங்குகளும் வீட்டில் நிதி வளத்தை வரவேற்கும் திறன் கொண்டவை.