MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: திருஷ்டி தோஷங்களை விரட்டும் எளிய பரிகாரங்கள்.! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?

Spiritual: திருஷ்டி தோஷங்களை விரட்டும் எளிய பரிகாரங்கள்.! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?

வீட்டில் ஏற்படும் திருஷ்டி தோஷத்தால் உண்டாகும் மன அமைதி குறைவு, உடல்நல பாதிப்பு போன்ற பிரச்சனைகளைத் தடுக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. கல் உப்பு, கற்பூரம் பயன்படுத்துதல் போன்ற பரிகாரங்கள் மூலம் வீட்டில் அமைதியையும் லட்சுமி கடாட்சத்தையும் பெறலாம்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 12 2025, 02:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருஷ்டி தோஷத்தை போக்கும் எளிய வழிமுறைகள்!
Image Credit : Asianet News

திருஷ்டி தோஷத்தை போக்கும் எளிய வழிமுறைகள்!

வீட்டில் ஏற்படும் திருஷ்டி பாதிப்புகள் நம்முடைய மன அமைதியையும், உடல் நலனையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கக் கூடும் என்று பெரியோர்கள் கூறுவர். இதனை போக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
அருள் செய்யும் கல்உப்பு
Image Credit : Asianet News

அருள் செய்யும் கல்உப்பு

வீட்டின் தரையை தண்ணீரால் கழுவும் போது, அந்த நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து பயன்படுத்துவது மிகப் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது வீட்டில் தோஷ சக்திகள் நுழையாமல் தடுக்கும். அதேபோல், ஞாயிற்றுக்கிழமையும் அமாவாசை நாளும் கற்பூரம், பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய் போன்றவற்றைக் கொண்டு திருஷ்டி சுற்றி வீதியோரத்தில் உடைத்தால், நெகட்டிவ் சக்திகள் விலகும்.

வீட்டில் மூத்தவர்கள் மற்றவர்களுக்குத் திருஷ்டி சுற்றி போடலாம். ஆனால் அந்த பொருட்கள் யாருடைய காலிலும் மிதியாதபடி கவனிக்க வேண்டும். வாரம் ஒருமுறை பூஜையறையில் குங்கிலியம், சாம்பிராணி புகை காட்டி வழிபடுவது தீய சக்திகளை நீக்கும்.  

Related Articles

Related image1
Spiritual: கோவில் குளத்தில் வெல்லம் கரைத்தால் வியாதிகள் விலகும் அதிசயம்.! எந்த கோவில்? எங்குள்ளது தெரியுமா?!
Related image2
Spiritual: குடிசை வீட்டில் வசிப்பவரை குபேரன் ஆக்கும் சஸ்திர பந்தம்.! தினமும் 27 முறை படித்தால் போதும்.! டாடா - பிர்லா வரிசையில் உங்கள் பெயர்.!
34
தீபம் ஏற்றி வழிபட வேண்டும்
Image Credit : Youtube

தீபம் ஏற்றி வழிபட வேண்டும்

வீட்டின் முற்றத்தில் அல்லது பால்கனியில் மலர்ச் செடிகள், குறிப்பாக முள் கொண்ட ரோஜா போன்றவை வளர்ப்பது திருஷ்டி சக்தியை போக்கும் என்று நம்பப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வேல்மாறல் பாராயணம் படிக்கலாம், இது சக்திவாய்ந்த பாதுகாப்பை அளிக்கும்.

சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் கருடாழ்வாருக்கு துளசி சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு.இது லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும். வீட்டில் வலம்புரிச் சங்கு வைத்திருப்பது வாஸ்து தோஷம் மற்றும் பகை சக்திகளை விலக்கிடும்.

44
திருஷ்டி தோஷங்களையும் நீங்கும்
Image Credit : Asianet News

திருஷ்டி தோஷங்களையும் நீங்கும்

வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் கற்றாழை அல்லது ஆகாயக் கருடக் கிழங்கை வீட்டின் வாயிலில் கட்டி வைத்தால் நல்ல சக்திகள் நிலைபெறும். காலை, மாலை இருவேளையும் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கடன் பிரச்சினைகளையும் திருஷ்டி தோஷங்களையும் நீக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த எளிய பரிகாரங்களைச் செய்தால் வீட்டிலும் மனதிலும் அமைதி நிலைத்து, அனைத்து தோஷங்களும் விலகும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Bhagavan: சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Recommended image2
May 2026 Rasi Palan: அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image3
Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!
Related Stories
Recommended image1
Spiritual: கோவில் குளத்தில் வெல்லம் கரைத்தால் வியாதிகள் விலகும் அதிசயம்.! எந்த கோவில்? எங்குள்ளது தெரியுமா?!
Recommended image2
Spiritual: குடிசை வீட்டில் வசிப்பவரை குபேரன் ஆக்கும் சஸ்திர பந்தம்.! தினமும் 27 முறை படித்தால் போதும்.! டாடா - பிர்லா வரிசையில் உங்கள் பெயர்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved