குறைந்தபட்ச சம்பளம் ரூ.51,480 ஆக உயர வாய்ப்பு!! 8வது ஊதியக்குழு அப்டேட்!!
8வது ஊதியக் குழுவில் லெவல் 1 முதல் 6 வரை உள்ள அரசு ஊழியர்களுக்கு ஆரம்ப ஊதிய நிலைகளில் மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது ஊழியர்களின் மொத்த வருமானத்தில் கணிசமான உயர்வை ஏற்படுத்தும்.

மத்திய அரசு ஊழியர் சம்பளம்
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் 8வது ஊதியக்குழுவில், முக்கியமான மாற்றங்கள் வரக்கூடும் என தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக, லெவல் 1 முதல் 6 வரை உள்ள ஆரம்ப ஊதிய நிலைகளில் உள்ள ஊழியர்களுக்கு பெரிய நன்மை ஏற்படும் வகையில் புதிய மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், லெவல் 1 மற்றும் 2 ஐ இணைத்து புதிய ஒரு லெவல் உருவாக்கப்படும்.
8வது ஊதியக்குழு
அதோடு லெவல் 3–4, லெவல் 5–6 ஆகியனவும் ஒன்றிணைக்கப்படலாம் என சாத்தியங்கள் உள்ளன. இந்த ஒருங்கிணைப்பு மூலமாக, தற்போது ரூ.18,000 அடிப்படை ஊதியம் பெறும் லெவல் 1 ஊழியர்கள் மற்றும் ரூ.19,900 பெறும் லெவல் 2 ஊழியர்கள், ஒரே தளத்தில் உள்ள புதிய லெவலில் இணைக்கப்படுவார்கள். இதன் அடிப்படையில், திருத்தப்பட்ட சம்பள அமைப்பின் கீழ், குறைந்தபட்ச ஊதியம் ரூ.51,480 ஆக உயர வாய்ப்புள்ளது.
லெவல் 1 முதல் 6 ஊதிய உயர்வு
இது ஊழியர்களின் மொத்த வருமானத்தில் கனிசமான உயர்வை ஏற்படுத்தும். மேலும், லெவல் 3 மற்றும் 4 ஐ இணைக்க திட்டமிட்டால், அந்த தொகுப்பில் உள்ள ஊழியர்களுக்கு ரூ.72,930 வரை திருத்தப்பட்ட சம்பளம் நிர்ணயிக்கப்படலாம். மேலும், லெவல் 5 மற்றும் 6ஐ ஒருங்கிணைத்தால், 2.86 ஃபிட்மென்ட் ஃபேக்டரை அடிப்படையில், ஊதியம் ரூ.1,01,244 வரை உயரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
8வது CPC சம்பள மேம்பாடு
இதற்காக ஊழியர் சங்கங்கள் அரசுக்கு பல பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளன. இந்த திட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்தால், 7வது ஊதியக்குழுவின் முரண்பாடுகள் தீர்ந்து, மூன்றாம் நிலை பணியாளர்களின் நிதி நிலை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சம்பள படிநிலைகள் ஊழியர்களுக்கு நீண்ட கால நிதி பாதுகாப்பையும், தொழில் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும்.
ஊதிய உயர்வு மாற்றம்
இவை அனைத்தும் தற்போது பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே உள்ளன. 8வது ஊதியக்குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான பின்னரே, ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு பற்றிய தெளிவான தகவல்கள் உறுதியாகத் தெரியும்.