- Home
- Tamil Nadu News
- அரசு ஊழியர்களுக்கு குஷியான அறிவிப்பு.! உடனே இதை நிறுத்துங்க - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு குஷியான அறிவிப்பு.! உடனே இதை நிறுத்துங்க - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பணியை விட மாற்றுப்பணி வழங்கப்படுவதாக புகார் கூறப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு தற்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரசும் அரசு ஊழியர்களும்
அரசு ஊழியர்கள் தான் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பாலமாக உள்ளனர். அரசு என்ன தான் புதிய, புதிய அறிவிப்புகள் அறிவித்தாலும் அந்த அறிவிப்புகள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது அரசு ஊழியர்களின் பணியாகும். அந்தவகையில் அரசு ஊழியர்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கிராம உதவியாளர்கள் தான் மக்களுடன் நேரடியாக தொடர்பில் உள்ளவர்.
எனவே அவர்களுக்கு என வரி வசூல் மற்றும் கணக்கு பராமரிப்பு, கிராமத்தில் நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி போன்றவற்றை வசூலித்தல். கிராம கணக்குகளை முறையாக பராமரித்தல் மற்றும் நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல்.பிறப்பு, இறப்பு, மற்றும் பிற பதிவேடுகளைத் தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல்.
கிராம உதவியாளர்கள் பணி
கிராம நிர்வாக ஆவணங்களின் பாதுகாப்பது, கிராமத்தில் உள்ள ஆவணங்களை பாதுகாத்தல். விளைநிலங்களை அளத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவுதல். பிறப்பு, இறப்பு, தற்கொலை, விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்றவற்றின் தகவல்களை சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையாக அளித்தல்.
முதியோர் ஓய்வூதியம், சாதி, வருவாய், இருப்பிடம், வாரிசு சான்றிதழ்கள் வழங்குவதற்கு முன் உரியவர்களை விசாரித்தல் ஆகியவை முக்கிய பணியாக உள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் கிராம நிருவாகம் கிராம உதவியாளர்களை கிராம நிருவாக பணியினை தவிர இதர பணிகளுக்கும் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
கிராம உதவியாளர்களுக்கு மாற்றுப்பணி
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் சார்பில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், கிராம நிருவாகம் கிராம உதவியாளர்களை கிராம நிருவாக பணியினை தவிர இதர பணிகளுக்கும் பயன்படுத்தி வருவதை தடுத்திட சங்கங்கள் கோரிக்கை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கிராமத்தில் இருந்து வெளியில் பணியாற்றும் மாற்றுப்பணி நியமனங்களை அதாவது கிராமப் பணி அல்லாத அலுவலகப்பணிகள், ஆய்வு மாளிகை, புத்தக திருவிழா போன்ற பிறதுறை பணிகளில் ஈடுபடுத்துவதை தடுத்திட நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளுக்கு திடீர் உத்தரவு
ஆணையர் அவர்கள் கிராம உதவியாளர்களை கிராம பணியை மட்டும் பார்க்க அனுமதியுங்கள் கிராம பணியை தவிர மாற்றுப் பணிக்கு பயன்படுத்தக்கூடாது என்று கீழ்நிலை அலுவலர்களுக்கு வழிகாட்டியும் அந்த உத்தரவை நடைமுறைபடுத்தாமல் தொடர்ந்து கிராம உதவியாளர்களை பல்வேறு பணிகளுக்கு பணிகளுக்கு பயன்படுத்திவரும் போக்கு சரியானது இல்லை எனவும், கிராம உதவியாளர்களின் பணி தன்மையை வெளியிடவேண்டும் என கோரியுள்ளது.
எனவே சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக, கிராம உதவியாளர்களை கிராம நிர்வாகப் பணிக்கு தவிர இதர பணிகளுக்கு பயன்படுத்தி வருவதை தவிர்ப்பது தொடர்பாக கடிதத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றிட மாவட்ட ஆட்சியரின் கீழுள்ள சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.