MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • நாங்கெல்லாம் ரூல்ஸை பிரேக் பண்றவங்க... அஸீமை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த வனிதா - வைரலாகும் போட்டோஸ்

நாங்கெல்லாம் ரூல்ஸை பிரேக் பண்றவங்க... அஸீமை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த வனிதா - வைரலாகும் போட்டோஸ்

அஸீமுக்கு எதிராக பலரும் பதிவிட்டு வரும் நிலையில், அஸீமை தனது வீட்டு அழைத்து விருந்து கொடுத்து அவருக்கு ஆதரவளித்துள்ளார் வனிதா விஜயகுமார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 29 2023, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்த சீசனின் இறுதிப்போட்டிக்கு அஸீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் தேர்வாகினர். இதில் ஷிவின் மூன்றாம் இடைத்தை பிடிக்க, முதல் இரண்டு இடங்களுக்கு அஸீம், விக்ரமன் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் விக்ரமன் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஸீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அஸீம் பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை ஜெயித்தது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அவர் டைட்டில் வெல்ல தகுதியே இல்லாதவர் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அஸீம், தான் பிக்பாஸ் மூலம் வென்ற ரூ.50 லட்சத்தில் ரூ.25 லட்சத்தை கொரோனாவால் பெற்றொர்களை இழந்த ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு தருவதாக அறிவித்து அதிரடி காட்டினார்.

இதையும் படியுங்கள்... தொடரும் வசூல் வேட்டை... நான்கு நாட்களில் ரூ.400 கோடி கலெக்‌ஷன் அள்ளிய ஷாருக்கானின் பதான்

34

அஸீமுக்கு எதிராக பலரும் பதிவிட்டு வரும் நிலையில், அஸீமை தனது வீட்டு அழைத்து விருந்து கொடுத்து அவருக்கு ஆதரவளித்துள்ளார் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா. அதோடு, இங்கு நாங்கள் யாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வரவில்லை, நாங்கெல்லாம் ரூல்ஸை பிரேக் பண்றவங்க என கேப்ஷனும் குறிப்பிட்டு அஸீம் உடன் எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார் வனிதா.

44

நடிகை வனிதா, அஸீமுக்கு ஆதரவு தெரிவிக்க முக்கிய காரணமும் இருக்கிறது. அவர் இந்த சீசனில் விக்ரமன் வெற்றிபெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஏனெனில் விக்ரமனுக்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்ததை கடுமையாக விமர்சித்த வனிதா, இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வந்தார். இதனால் அவருக்கு மிரட்டல்களும் வந்ததாக வனிதா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... என்ன சிம்ரன் இதெல்லாம்... நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்த சிம்ரன் - வைரலாகும் போட்டோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss சீசன் 10-ல் காமன்மேனுக்கு விஜய் சேதுபதி கொடுத்த கோல்டன் சான்ஸ் - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
Recommended image2
பிக் பாஸ் டைட்டிலை தட்டிதூக்கிய திவ்யா கணேஷ்... டிராபியோடு அவர் அள்ளிச் சென்ற பரிசுகள் என்னென்ன?
Recommended image3
பிக் பாஸ் பைனலிஸ்டுகளுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதிலும் திவ்யா தான் டாப்பு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved