என்ன சிம்ரன் இதெல்லாம்... நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்த சிம்ரன் - வைரலாகும் போட்டோ
நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய கவர்ச்சியான உடை அணிந்து நடிகை சிம்ரன் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். இவர் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். கவர்ச்சி, டான்ஸ் என கலக்கி 90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக வலம் வந்த சிம்ரன், திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
இதையடுத்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரிஷா இல்லேனா நயன்தாரா படத்தின் மூலம் கோலிவுட்டில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார் சிம்ரன். இதையடுத்து சிவகார்த்திகேயனின் சீமராஜா, ரஜினியுடன் பேட்ட, விக்ரம் ஜோடியாக மகான் போன்ற படங்களில் நடித்து அசத்தினார்.
இதையும் படியுங்கள்... நான் ரெடி.... விஜய் ரெடியா? தளபதி உடனான 15 வருட பிரச்சனை குறித்து மனம்திறந்த நெப்போலியன்
தற்போது அந்தகன், துருவ நட்சத்திரம் மற்றும் வணங்காமுடி ஆகிய மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார் சிம்ரன். இந்த மூன்று படங்களுமே ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதில் அந்தகன் படத்தை தியாகராஜாவும், துருவ நட்சத்திரம் படத்தை கவுதம் மேனனும், வணங்காமுடி படத்தை செல்வாவும் இயக்கி உள்ளனர்.
இந்நிலையில், நடிகை சிம்ரன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. நெஞ்சில் குத்திய டாட்டு தெரிய கவர்ச்சியான ஆடையில் அவர் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள், 46 வயதிலும் சிம்ரன் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இப்படி ஏமாத்திட்டீங்களே அஜித்... விக்னேஷ் சிவனுக்காக நீதி கேட்கும் நெட்டிசன்ஸ் - டிரெண்டாகும் ஹேஷ்டேக்