MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இப்படி ஏமாத்திட்டீங்களே அஜித்... விக்னேஷ் சிவனுக்காக நீதி கேட்கும் நெட்டிசன்ஸ் - டிரெண்டாகும் ஹேஷ்டேக்

இப்படி ஏமாத்திட்டீங்களே அஜித்... விக்னேஷ் சிவனுக்காக நீதி கேட்கும் நெட்டிசன்ஸ் - டிரெண்டாகும் ஹேஷ்டேக்

ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதற்கு நீதி கேட்டு #JusticeforVigneshShivan என்கிற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 29 2023, 12:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டு உள்ளார். அப்படத்தை அவருக்கு பதிலாக மகிழ் திருமேணி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பும் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு நீதி கேட்டு #JusticeforVigneshShivan என்கிற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

24

அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. அந்த சமயத்தில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த உற்சாகத்தில் எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும். காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும். இப்படி ஒரு மிகப்பெரிய வாய்ப்பளித்த அஜித் சாருக்கு நன்றி. சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” என பதிவிட்டிருந்தார் விக்கி.

இதையும் படியுங்கள்... அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்கி... நயன்தாராவின் சமரச பேச்சுக்கும் செவி சாய்க்காத லைகா..?

34

அதுமட்டுமின்றி புத்தாண்டன்று கடந்தாண்டு நடந்த மறக்க முடியாத நிகழ்வுகள் சிலவற்றை தொகுத்து அதனை பதிவிட்டிருந்தார். அதில் அஜித்தின் ஏகே 62 படம் குறித்தும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார் விக்னேஷ் சிவன். இப்படி அஜித் படத்தை இயக்க ஆவலோடு காத்திருந்த விக்னேஷ் சிவனுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், திடீரென அவரை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்ட தகவல் அனைவருக்குமே பேரதிர்ச்சியாக உள்ளது.

44

இதை அறிந்த நெட்டிசன்கள் விக்னேஷ் சிவனுக்கு நீதி கேட்டு, #JusticeforVigneshShivan என்கிற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். விக்னேஷ் சிவனை இப்படி ஏமாத்திட்டீங்களே அஜித் என தங்களது ஆதங்கத்தையும் அதன் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் மீம் போட்டும் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் #JusticeforVigneshShivan என்கிற ஹேஷ்டேக் தான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

இதையும் படியுங்கள்... விக்னேஷ் சிவனை லைகா கழட்டிவிடுவது இது முதல்முறை அல்ல... 3 வருஷத்துக்கு முன் இதேபோல் நடந்த சம்பவம் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கயல் சீரியல் நடிகையின் உயிரைப் பறித்த வீடியோ கால்... அதிர்ச்சியில் ரசிகர்கள்
Recommended image2
Now Playing
ராஷ்மிகா மந்தனா கர்ப்பமா? இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்: உண்மை என்ன?
Recommended image3
Now Playing
Leader Day 3 Box Office | லெஜண்டின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்... 3 நாட்களில் 25 கோடி வசூல் அள்ளிய லீடர்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved