புதிய கிரில், LED லைட்ஸ்… லுக் செஞ்சிட்டாங்க.. Punch.ev இன்ஸ்பிரேஷனில் Tata Punch Facelift
விரைவில் வரவிருக்கும் டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட், Punch.ev-இன் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு புதிய கிரில், LED ஹெட்லாம்புகளுடன் வருகிறது. 2-ஸ்போக் ஸ்டீயரிங், 10.2-அங்குல டிஜிட்டல் கிளஸ்டர், 6 ஏர்பேக்குகள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும்.

டாடா பஞ்ச் பேஸ்லிப்ட்
இந்தியாவின் அதிகம் விற்கப்படும் கார்கள் பட்டியலில் இடம்பிடித்த டாடா பஞ்ச் (Tata Punch) தனது புதிய Facelift வடிவில் விரைவில் வர உள்ளது. சமீபத்திய ஸ்பை புகைப்படங்கள், Punch.ev-இன் வடிவமைப்பை கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறத்தில் புதிய ரேடியேட்டர் கிரில், மெலிதான DRL-கள் மற்றும் அதிக பிரகாசம் கொண்ட LED ஹெட்லாம்புகள் இடம்பெற்றுள்ளன. Split headlamp அமைப்பு மாறாமல் தொடரும். மேலும், புதிய 16-அங்குல அலாய் வீல்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட டெயில் விளக்குகள் உடன் வர உள்ளது.
ஸ்டைலிஷ் இன்டீரியர் அப்டேட்கள்
உள்புறத்தில் Tata Punch Facelift பல அம்சங்களுடன் வருகிறது. தற்போது ஸ்பை படங்களில் தென்பட்ட புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங், கார் கேபினுக்கு ஒரு கிளாசி லுக் தரும். இதே ஸ்டீரிங் வடிவம் Punch.ev-இலும் பயன்படுத்தப்பட்டுள்ளது, நடுப்பகுதியில் பெரிய லோகோவுடன் வரும். மேலும், 10.2-அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், வென்டிலேட்டட் முன் சீட்டுகள், மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை Punch-ன் இன்டீரியரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று விடும். பாதுகாப்பு அம்சங்களாக 360° கேமரா, Blind Spot Monitor மற்றும் 6 ஏர்பேக்குகள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பகமான 1.2L என்ஜின்
புதிய Punch Facelift-ல் என்ஜின் அல்லது கியர்பாக்ஸ் மாற்றங்கள் அதிகம் இருக்காது. தற்போது உள்ள அதே 1.2 லிட்டர் Revotron பெட்ரோல் என்ஜின் (87hp, 115Nm) மற்றும் 1.2 லிட்டர் CNG இரு எரிபொருள் (72hp, 115Nm) விருப்பங்கள் தொடரும். 5-ஸ்பீட் மேனுவல் ஸ்டாண்டர்டாக இருக்கும். இப்போது AMT மட்டும் பெட்ரோல் மாறுபாடு-ல் கிடைக்கிறது; ஆனால் Facelift-ல் பெட்ரோல் + CNG இரண்டிலும் AMT வழங்கப்படும் வாய்ப்பு அதிகம்.
வெளியீட்டு தேதி மற்றும் விலை
Tata Motors இந்த Tata Punch Facelift-ஐ 2026 தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன. விலையும் மிகப் பெரிய உயர்வு இல்லாமல், சுமார் ரூ.5.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பஞ்ச், ஸ்டைல், தொழில்நுட்பம், கம்ஃபர்ட், பாதுகாப்பு ஆகிய அனைத்திலும் சிறந்த மேம்பாடுகளைக் கொண்ட ஒரு முழுமையான மிட்-லைஃப் அப்டேட் ஆக இருக்கும்.

