ரூ.18,000 மட்டுமே…குழந்தைகளுக்கான மாஸ் கார்.. மஹிந்திரா BE6 எலக்ட்ரிக் கார் அறிமுகம்
மஹிந்திரா, தனது BE6 ஃபார்முலா E எடிஷன் காரின் வடிவமைப்பில் குழந்தைகளுக்கான புதிய எலக்ட்ரிக் ரைடு-ஆன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ரிமோட் கண்ட்ரோல், ப்ளூடூத் ஆடியோ சிஸ்டம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

மஹிந்திரா BE6 குழந்தைகள் கார்
மஹிந்திரா எப்போதுமே கார் ஆர்வலர்களுக்கான பிராண்டாக பெயர் பெற்றது என்றே கூறலாம். பெரிய அளவிலான எஸ்யூவிகள், ஸ்பெஷல் எடிஷன்கள் மட்டுமல்ல, குழந்தைகளுக்கான ரைடு-ஆன் கார்களும் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதே வரிசையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட BE6 Formula E எடிஷன் வடிவமைப்பை கொண்டு, புதிய மின்சார ரைடு-ஆன் கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது செய்யப்பட்டது. குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற இந்த BE6 ரைடு-ஆன் கார், அதன் வடிவமைப்பிலேயே சிறப்பு என்பதையே முதல் பார்வையில் உணரலாம்.
வெளிப்புறத் தோற்றத்திலேயே BE6 Formula E கார் மாடலைப் போன்ற LED ஹெட்லைட்களும், ரியர் லைட்களும் வழங்கப்பட்டுள்ளன. கதவுகள் திறக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டதால், குழந்தைகள் எளிதாக உள்ளே நுழையவும், வெளியே வரவும் முடியும். உள்ளமைப்பு பகுதியிலும் நிஜ கார் மாதிரி போல காட்சி அளிக்கும் ஃபோக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன் பானலும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் ‘டிரைவிங்’ அனுபவத்தை விளையாட்டாக அல்லாமல் உண்மையான சாகசமாக உணருவார்கள்.
குழந்தைகளுக்கான ரைடு-ஆன் கார்
அதே நேரத்தில், இந்த ரைடு-ஆன் காரில் ஆடியோ சிஸ்டமும் உள்ளது. குழந்தைகள் பாடல்களை கேட்க ப்ளூடூத் மூலமாக மொபைலை இணைக்கலாம். ஒரு பெரிய ஒற்றை சீட் வழங்கப்பட்டுள்ளதால், குழந்தை எளிதாக அமர முடியும். பாதுகாப்பிற்காக சீட் பெல்ட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிய ரிச்சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியால் இயங்கும் இந்த கார், குழந்தை தானாக ஓட்டக்கூடியதுடன், பெற்றோர் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கவும் முடியும்.
மொத்தத்தில், ஒரு சிறாருக்கான ஸ்போர்ட்டி, பாதுகாப்பான மற்றும் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த ரைடு-ஆன் கார் தேடுபவர்களுக்கு மஹிந்திராவின் இந்த BE6 Formula E எடிஷன் சிறந்த தேர்வாகும். இக்காரின் விலை ரூ.18,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில், விநியோகம் அடுத்த ஆண்டிலிருந்து ஆரம்பமாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

