MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Auto
  • ஒரே சார்ஜில் 792 கிமீ ரேஞ்ச்.. சென்னை டூ நெல்லை நான்-ஸ்டாப் பயணம்.. EV கிங் Mercedes CLA

ஒரே சார்ஜில் 792 கிமீ ரேஞ்ச்.. சென்னை டூ நெல்லை நான்-ஸ்டாப் பயணம்.. EV கிங் Mercedes CLA

 Mercedes CLA EV கார் 100 கிமீ வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டி விடும்.  மணிக்கு 210 கிமீ வேகத்தில் செல்லும். 800 வோல்ட் சிஸ்டம் இருப்பதால் வெறும் 20 நிமிடங்கள் சார்ஜில் 400 கிமீ செல்ல முடியும்.

2 Min read
Author : Rayar A
Published : Feb 24 2026, 06:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார்
Image Credit : x

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ எலெக்ட்ரிக் கார்

இந்தியாவில் பெட்ரோல் விலை ராக்கெட் வேகத்தில் சென்று வருவதால் மக்கள் மின்சார கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கார் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டு இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் சொகுசு கார் தயாரிப்பு நிறுவமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ (Mercedes-Benz CLA) எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் இன்று (பிப்ரவரி 24 காட்சிப்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ஒரே சார்ஜ் செய்தால் 792 கிமீ ரேஞ்ச்
Image Credit : X

ஒரே சார்ஜ் செய்தால் 792 கிமீ ரேஞ்ச்

அதிநவீன வசதிகள் நிறைந்த இந்த பிரம்மாண்டமான சொகுசு எலெக்ட்ரிக் கார் ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 792 கிமீ ரேஞ்ச் கொடுக்கும். இதற்கான WLTP சான்றிதழ் பெற்றுள்ளது. அதாவது ஒரே ஒரு முறை சார்ஜ் செய்தால் நீங்கள் சென்னையில் இருந்து நெல்லைக்கு இடையில் நிற்காமல் பயணம் செய்ய முடியும். இந்தியாவில் நீண்ட தூரம் செல்லும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக இது இருக்கும்.

Related Articles

Related image1
டாடா பஞ்ச் EV விலை வெறும் ரூ.6 லட்சம் தானா.. இந்த ஒரு 'பாஸ்' இருந்தால் போதும்.. மெகா ஆஃபர்!
Related image2
ரூ.1 லட்சம் கூட இல்ல.. நடுத்தர குடும்பங்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள்.. அட! இவ்வளவு வசதிகளா?
33
6.7 வினாடிகளில் 100 கிமீ வேகம்
Image Credit : x

6.7 வினாடிகளில் 100 கிமீ வேகம்

மணிக்கு 210 கிமீ வேகத்தில் செல்லும் இந்த கார் 100 கிமீ வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டி விடும். 800 வோல்ட் சிஸ்டம் இருப்பதால் வெறும் 20 நிமிடங்கள் சார்ஜில் 400 கிமீ செல்ல முடியும். Mercedes-Benz CLA மாடலில் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 14 இன்ச் மெகா டச்ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டமும் உள்ளது. மேலும் AI அம்சங்களான சாட்ஜிடிபி மற்றும் கூகுள் ஜெமினி கொடுக்கப்பட்டுள்ளதால் வாய்ஸ் மூலம் காரை கட்டுப்படுத்த முடியும்.

விலை என்ன?

மேலும் முன்பக்க சொகுசு இருக்கைகளில் மசாஜ் வசதி, ஹீட்டிங் மற்றும் வென்டிலேஷன், 16 ஸ்பீக்கர்கள் கொண்ட Burmester 3D சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கொட்டிக்கிடக்கின்றன. இதுமட்டுமின்றி பெரிய பானரோமிக் கிளாஸ் ரூஃப், , 100W பாஸ்ட் USB-C சார்ஜிங் போர்ட்கள் என வசதிகளுக்கு பஞ்சமில்லை. இந்த காரின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த மாடலின் பேசிக் வேரியண்ட் விலை ரூ.45 லட்சத்தில் இருந்தும், டாப் வேரியண்ட் விலை ரூ.55 லட்சத்தில் இருந்தும் தொடங்கும் என எதிபார்க்கப்படுகிறது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மின்சார கார்
குறைந்த விலையில் எலக்ட்ரிக் கார்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Budget CNG Cars: ரூ.10 லட்சத்திற்குள் 34 கிமீ மைலேஜ்.. டாப் 5 சிஎன்ஜி கார்கள் லிஸ்ட் இதோ!
Recommended image2
FASTag: பழைய காரை வித்துட்டீங்களா? உடனே ஃபாஸ்ட்டேக்கை க்ளோஸ் பண்ணுங்க.. இல்லனா உங்க அக்கவுண்ட் காலி!
Recommended image3
Best Selling Scooters: ஆகஸ்டில் அதிகம் விற்ற ஸ்கூட்டர்கள் எவை? வாங்கும் முன் இந்த டாப் 5 லிஸ்ட்டை பாருங்க
Related Stories
Recommended image1
டாடா பஞ்ச் EV விலை வெறும் ரூ.6 லட்சம் தானா.. இந்த ஒரு 'பாஸ்' இருந்தால் போதும்.. மெகா ஆஃபர்!
Recommended image2
ரூ.1 லட்சம் கூட இல்ல.. நடுத்தர குடும்பங்களுக்கான டாப் 5 ஸ்கூட்டர்கள்.. அட! இவ்வளவு வசதிகளா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved