மஹிந்திரா ஸ்கார்பியோ முதல் கியா கேரன்ஸ் வரை.. டாப் 10 மலிவு விலை 7 சீட்டர் கார்கள்.!
இந்திய சந்தையில் குடும்பங்களுக்கு மிகவும் பிடித்தமான 7 சீட்டர் வாகனங்கள் ஏராளமாக உள்ளன. அதில் நிசான் டாப் 10 மாடல்களை அவற்றின் விலை மற்றும் முக்கிய அம்சங்களை தெரிந்துகொள்வோம்.

ஏழு சீட்டர்கள் பிரபலமான கார்கள்
வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவின் பொருளாதார சூழலில், சொந்தக் கார் என்பது தற்போது அத்தியாவசிய தேவைகளின் ஒன்றாக மாறிவிட்டது. வீட்டுக்கு வீடு இருசக்கரம் வாகனம் போல கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கார்களின் வாடகையும் தொடர்ச்சியாக அதிகரித்துக் வருவதால் பலரும் காருக்கு வாடகை கொடுப்பதற்கு பதிலாக சொந்தமாக கார் வாங்குவது லாபம் என்று நினைக்கது கார்களை வாங்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் வாகனங்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இதில், நிசான், ரெனால்ட், மஹிந்திரா, மாருதி, டொயோட்டா, கியா, சிட்ரோன் போன்ற பிராண்டுகளின் மாடல்கள் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. ஆனால், இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் கார்களின் டாப் 10 பட்டியலை இங்கே காணலாம்.
மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் – ரூ.12.98 லட்சம் முதல் ரூ.16.70 லட்சம்
132hp 2.2L டீசல் இன்ஜின்
வலுவான வடிவமைப்பு மற்றும் பாரம்பரியத்தால் பிரபலமான மாடல். உயரமான இருக்கை அமைப்பு, அதிக ஹெட்ரூம், இரண்டாவது வரிசை பெஞ்சில் மூன்று பேர் வசதியாக அமரக்கூடியது. மூன்றாவது வரிசையில் குறைந்த இடவசதியுடன் ஜம்ப் சீட்கள் உள்ளன. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரானது, 9 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
சிட்ரோன் ஏர்கிராஸ் X ரூ.11.57 லட்சம் – ரூ.13.94 லட்சம்
110hp 1.2L டர்போ பெட்ரோல்
காற்றோட்டமான முன் இருக்கைகள் (மிக்ஸி வேரியண்டில்), நடுத்தர வரிசையில் நல்ல ஹெட்ரூம். மூன்றாவது வரிசை குழந்தைகளுக்கு ஏற்றது.
கியா கேரன்ஸ் – ரூ.10.99 லட்சம் –ரூ.12.77 லட்சம்
115hp 1.5L பெட்ரோல் / 116hp டீசல்
பிரீமியம் இன்டீரியர், அனைத்து வரிசைகளிலும் வசதியான இருக்கைகள், எலக்ட்ரிக் உதவியுடன் மூன்றாவது வரிசைக்கு நுழையலாம்.
கியா கேரன்ஸ் கிளாவிஸ் – ரூ.10.99 லட்சம் – ரூ.12.77 லட்சம்
115hp 1.5L பெட்ரோல் / 160hp டர்போ / 116hp டீசல்
காற்றோட்டமான முன் இருக்கைகள், நடுத்தர வரிசைக்கு ஏர் கண்டிஷனிங், யுஎஸ்பி போர்ட்கள், மூன்றாவது வரிசைக்கு எலக்ட்ரிக் டம்பிள் சிஸ்டம்.
டொயோட்டா ரூமியான் – ₹10.51 லட்சம் – ₹13.86 லட்சம்
103hp 1.5L பெட்ரோல் / 88hp CNG
மாருதி எர்டிகாவின் பேட்ஜ் இன்ஜினியரிங் செய்யப்பட்ட மாடல். பெரிய கதவு திறப்பு அமைப்பு மற்றும் நடைமுறைக்கு ஏற்ற கேபின்.
மஹிந்திரா பொலிரோ நியோ ரூ.8.69 லட்சம் – ரூ.10.94 லட்சம்
100hp 1.5L டீசல்
சிறந்த நடுத்தர வரிசை, கடைசி வரிசைக்கு பக்கவாட்டு ஜம்ப் சீட்கள் (சீட் பெல்ட்கள் இல்லை).
மஹிந்திரா பொலிரோ – ரூ.7.99 லட்சம் – ரூ.9.69 லட்சம்
76hp 1.5L டீசல்
பயனுள்ள எஸ்யூவி/எம்பிவி, அடிப்படை அம்சங்கள், ஃபிட் மற்றும் ஃபினிஷ் சாதாரணமாக உள்ளது.
ரெனால்ட் டிரிபர் – ரூ.5.76 லட்சம் – ரூ.8.60 லட்சம்
72hp 1L பெட்ரோல் / CNG
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி கார்களில் ரெனால்ட் ட்ரைபர் மிக முக்கியமானது. ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ள 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹில் ஸ்டார்ஸ்ட் அஸிஸ்ட், ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளன.
மாருதி எர்டிகா – ரூ.8.80 லட்சம் – ரூ.12.94 லட்சம்
103hp 1.5L பெட்ரோல் / 88hp CNG
மாருதி எர்டிகா கார் முற்றிலும் வேறுபட்ட டிசைன். முன்புறத்தில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் முக்கிய அம்சங்களாக உள்ளன.இந்த காரில் 15 அ்ங்குல அலாய் வீல்கள், ஃப்ளோட்டிங் ரூஃப் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. புதிய மாடலில் 6.8 அங்குல ஃப்ளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட சிஸ்டம் உள்ளது
நிசான் கிராவிட் – ரூ.5.65 லட்சம் – ரூ.8.94 லட்சம்
இந்தியாவின் மலிவு விலை 7 சீட்டர் மாடல், டிரைபரை ஒத்திருக்கிறது, Renault Triber தளத்தை அடிப்படையாக கொண்டாலும், Gravite வெளிப்புற தோற்றம் மற்றும் உள்புற அமைப்பில் தனி அடையாளம் பெற்றுள்ளது. Visia, Acenta, N-Connecta, Tekna என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.65 லட்சம் முதல் ரூ.8.93 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த MPV-யில் 1 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 72 PS சக்தி மற்றும் 96 Nm டார்க் வழங்குகிறது. 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் AMT ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

