MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ஆக்டிவா மீண்டும் ராஜா.. ஹோண்டா ஜனவரி விற்பனை புள்ளிவிவரம் வெளியீடு.. அடேங்கப்பா!

ஆக்டிவா மீண்டும் ராஜா.. ஹோண்டா ஜனவரி விற்பனை புள்ளிவிவரம் வெளியீடு.. அடேங்கப்பா!

2026 ஜனவரியில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 29% வளர்ச்சியுடன் 5,19,579 வாகனங்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 29% உயர்வுடன் மொத்தம் 5,19,579 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 23 2026, 11:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஹோண்டா ஜனவரி விற்பனை
Image Credit : bikedekho

ஹோண்டா ஜனவரி விற்பனை

2026 ஜனவரி மாதம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனத்திற்கு மிகச் சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது, ​​நிறுவனம் 29 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து மொத்தமாக 5,19,579 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2025 ஜனவரியில் 4,02,977 வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டின் உயர்வு நிறுவனத்தின் வலுவான சந்தை நிலையைக் காட்டுகிறது. ஸ்கூட்டர்கள் மற்றும் கம்யூட்டர் பைக்குகள் இரண்டும் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

25
ஆக்டிவா விற்பனை
Image Credit : Google

ஆக்டிவா விற்பனை

ஸ்கூட்டர் பிரிவில், ஆக்டிவா மீண்டும் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 2,71,924 யூனிட்கள் விற்பனையாகி, வருடத்துக்கு வருடம் சுமார் 63 சதவீத உயர்வை பெற்றுள்ளது. இந்திய ஸ்கூட்டர் சந்தையில் ஆக்டிவா தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்திருப்பது, அதன் நம்பகத்தன்மை மற்றும் எரிபொருள் சிக்கனம் காரணமாகும்.

Related Articles

Related image1
169 கிமீ ரேஞ்ச்.. இனி எல்லார் வீட்லயும் இந்த ஸ்கூட்டர் தான்..! Yamaha EC-06
Related image2
டாடா பஞ்ச் EV விலை வெறும் ரூ.6 லட்சம் தானா.. இந்த ஒரு 'பாஸ்' இருந்தால் போதும்.. மெகா ஆஃபர்!
35
ஷைன் 125
Image Credit : Google

ஷைன் 125

பைக் பிரிவில், ஷைன் 125 நிறுவனம் அதிகம் விற்ற மோட்டார்சைக்கிளாக திகழ்ந்தது. கடந்த மாதத்தில் 1,35,076 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 11 சதவீதம் குறைவு காணப்பட்டுள்ளது. இதனுடன் CB யூனிகார்ன் 160, 35,710 யூனிட்கள் விற்பனையுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

45
ஷைன் 100 விற்பனை
Image Credit : honda

ஷைன் 100 விற்பனை

என்ட்ரி லெவல் பிரிவில், ஷைன் 100 சிறப்பான வளர்ச்சியை காட்டியுள்ளது. ஜனவரியில் 26,148 யூனிட்கள் விற்பனையாகி, 55 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேவேளை டியோ ஸ்கூட்டர் 13,855 யூனிட்களுடன் 44 சதவீத சரிவை சந்தித்துள்ளது. டியோ 125 மாடல் 11,607 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

55
ஜனவரி மாத விற்பனை
Image Credit : Google

ஜனவரி மாத விற்பனை

மிட்-சைஸ் பிரிவில் CB 350 கனிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 5,500 யூனிட்கள் விற்பனையாகி, 200 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. CB 125 ஹார்னெட் 8,752 யூனிட்கள் விற்பனையாகின்றன, லிவோ 4,433 யூனிட்கள், SP 160 2,474 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. மொத்தத்தில், 2026 ஜனவரி ஹோண்டாவுக்கு வலுவான தொடக்கமாக அமைந்துள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹோண்டா ஆக்டிவா
ஹோண்டா பைக்
ஹோண்டா ஷைன்
பைக்குகள்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
169 கிமீ ரேஞ்ச்.. இனி எல்லார் வீட்லயும் இந்த ஸ்கூட்டர் தான்..! Yamaha EC-06
Recommended image2
பழைய கம்பீரம்.. புதிய பொலிவு.. புதிய அப்டேட்டுடன் களமிறங்கும் டாப் 4 செடான் கார்கள்!
Recommended image3
டாடா பஞ்ச் EV விலை வெறும் ரூ.6 லட்சம் தானா.. இந்த ஒரு 'பாஸ்' இருந்தால் போதும்.. மெகா ஆஃபர்!
Related Stories
Recommended image1
169 கிமீ ரேஞ்ச்.. இனி எல்லார் வீட்லயும் இந்த ஸ்கூட்டர் தான்..! Yamaha EC-06
Recommended image2
டாடா பஞ்ச் EV விலை வெறும் ரூ.6 லட்சம் தானா.. இந்த ஒரு 'பாஸ்' இருந்தால் போதும்.. மெகா ஆஃபர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved