9 மாருதி கார்கள் மீது பம்பர் தள்ளுபடி.. புதிய கார் வாங்க இதுதான் சரியான நேரம்.!
மாருதி சுசுகி தனது அரேனா ஷோரூம் மாடல்களுக்கு 2025 டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. புதிய கார் வாங்க அல்லது பழைய காரை மாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

மாருதி சுசுகி தள்ளுபடி
2025 முடிவுக்கு முன்னர் கார் பிரியர்களுக்கான நல்ல செய்தியை மாருதி சுசுகி வெளியிட்டுள்ளது. அதன் அரேனா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் 9 மாதங்களுக்கு டிசம்பர் மாத சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கார் வாங்கவோ அல்லது பழைய காரை மாற்றிக்கொள்ளவோ இது மிகச்சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால் தள்ளுபடியின் அளவு ஷோரூம் இருப்பு மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறக்கூடும் என்பதால், அருகிலுள்ள அரேனா டீலரைச் சந்தித்து துல்லியமான விவரத்தை அறிந்துகொள்வது நல்லது.
அதிகபட்ச சலுகைகள்
மாருதி சுசுகியின் மிகப் பிரபலமான ஹாட்ச்பேக் Wagon R–க்கு டிசம்பரில் அதிகபட்சமாக ரூ.58,100 வரை நன்மை வழங்கப்படுகிறது. பணத் தள்ளுபடி, மாற்று/ஸ்க்ராப் போனஸ், மற்றும் கூடுதல் சலுகைகள் இதில் அடங்கும். மலிவு விலை, நல்ல மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவையால் Wagon R ஏற்கனவே குடும்ப வாடிக்கையாளர்களின் விருப்பமாக உள்ளது.
சிறப்பு தள்ளுபடி
Maruti Swift–n பெட்ரோல் மற்றும் பிற மாடல்கள் வாங்குபவர்களுக்கு ரூ.55,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோன்று Alto K10 மற்றும் S-Presso ஆகிய ஆரம்ப நிலை மாடல்களுக்கு ரூ.52,500 வரை நன்மை கிடைக்கிறது. குறைந்த விலை மற்றும் நடைமுறைக்கு ஏற்ற வடிவமைப்பு காரணமாக இந்த இரண்டு கார்களும் எளிதில் வாங்கக்கூடியதாக உள்ளது.
விலை குறைப்பு
Eeco மற்றும் Celerio மாடல்களை டிசம்பரில் வாங்குபவர்களுக்கு ரூ.52,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறிய SUV வகைகளில் பிரபலமான Brezza–க்கு ரூ.40,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் பணத் தள்ளுபடி மற்றும் ஸ்க்ராப் போனஸ் ஆகியவை அடங்கும்.
டிசம்பர் கார் ஆஃபர்
அதிகம் விற்கப்படும் செடான் Dzire வாங்குபவர்களுக்கு ரூ.12,500 வரை டீலர் நிலை தள்ளுபடி கிடைக்கிறது. சமீபத்தில் இந்த மாடல் இந்திய NCAP பரிசோதனையில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பெண் பெற்றது என்பது முக்கிய அம்சம் ஆகும். மற்றொரு பிரபலமான குடும்ப MPV Ertiga–க்கு ரூ.10,000 வரை பணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மாதலுக்கு நல்ல தேவை தொடர்ந்து உள்ளது.

