ரூ.1.76 லட்சம் தள்ளுபடியில் ஹோண்டா எலிவேட்.. இந்த ஆண்டின் மிகப்பெரிய தள்ளுபடி.!
ஹோண்டா கார்ஸ் இந்தியா, தனது பிரபலமான SUV மாடலான எலிவேட் காருக்கு டிசம்பர் மாதத்தில் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதில் 360° கேமரா போன்ற அம்சங்கள் அடங்கிய 'எலைட் பேக்' சலுகையும் அடங்கும்.

ஹோண்டா எலிவேட் தள்ளுபடி
ஜப்பான் வாகன தயாரிப்பாளரான ஹோண்டா கார்ஸ் இந்தியா, டிசம்பர் மாதம் சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த பிரபலமான SUV மாடலான ஹோண்டா எலிவேட் வாங்குபவர்கள் இந்த மாதத்தில் ரூ.1.76 லட்சம் வரை நன்மைகள் பெறலாம். ஆண்டின் மிகப்பெரிய தள்ளுபடி இதுவாகக் கருதப்படுகிறது.
இதில் கிடைக்கும் ‘எலைட் பேக்’ மூலம் கூடுதல் செலவில்லாமல் 360° கேமரா, 7 நிற ஆம்பியன்ட் லைட் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன. ஹோண்டா எலிவெட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.99 லட்சத்தில் துவங்குகிறது, மேலும் இது மாருதி கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.
அடிப்படை SV டிரிம் வேரியனில் டூயல் ஏர்பேக்குகள், 16” வீல்கள், LED புரொஜெக்டர் விளக்குகள், ஆட்டோ ஏசி, புஷ்-பட்டன் ஸ்டார்ட், பீஜ் உள் போன்ற வசதிகள் உள்ளன. அடுத்த V ட்ரிம் வேரியனில் 8” டச் ஸ்கிரீன், Android Auto & Apple CarPlay, கனெக்டட் கார் டெக், மல்டி-ஸ்டீயரிங் & ரியர் கேமரா ஆகியவை சேர்கின்றன. இங்கு வாடிக்கையாளர்கள் CVT டிரான்ஸ்மிஷன் தேர்வு செய்யலாம்.
ஹோண்டா எலிவேட் சலுகை
VX ட்ரிம் வாங்குபவர்கள் 6 ஸ்பீக்கர் சவுண்ட், 7” இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், சன்ரூஃப், 17” அலாய் வீல்கள், எலக்ட்ரிக் ORVM & LaneWatch கேமரா போன்ற வசதிகளைப் பெறலாம். ZX டாப்-மாடல் வேரியனில் 10.25” டச் ஸ்கிரீன், ADAS பாதுகாப்பு, 6 ஏர்பேக்குகள், 8 ஸ்பீக்கர் ஆடியோ, ப்ரீமியம் டாஷ்போர்ட் & பிரவுன் லெதர் இன்டீரியர் வழங்கப்படுகிறது. ஹோண்டா எலிவேட் 10 வண்ணங்களில் கிடைக்கிறது. 7 சிங்கிள் டோன் மற்றும் 3 டூயல் டோன் ஆகும்.
இதில் சில நிறங்கள் ZX வேரியன்டுக்கு மட்டும் வழங்கப்படுகின்றன. இந்த SUV 121PS பவர் & 145Nm டார்க் உற்பத்தி செய்யும் 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜினால் இயக்கப்படுகிறது. இது 6-ஸ்பீட் மேனுவல் அல்லது CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. ஆனால் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் தள்ளுபடி தொகை டீலர், நகரம், நிறம் மற்றும் கையிருப்பை பொறுத்து மாறக்கூடும். எனவே, வாங்குவதற்கு முன் உங்கள் அருகிலுள்ள டீலரிடம் நிச்சயமான சலுகை விவரங்கள் கேட்டு சரிபார்க்கவும்.

