ரூ.1.50 லட்சம் சிறப்பு சலுகை! ஆகஸ்ட் 31 வரை மட்டுமே! ட்ரெண்டிங்கில் டுகாட்டி DesertX Rally
இந்த சலுகை ஆகஸ்ட் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும். 937 cc எஞ்சின், ஆறு ரைடிங் மோட்கள் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது.

டுகாட்டி DesertX Rally பைக் சலுகை
ஸ்போர்ட்ஸ் பைக் ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. டுகாட்டி இந்தியா தனது பிரீமியம் அட்வென்சர் பைக் DesertX Rally மாடலில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. எந்த நிலப்பரப்பிலும் எளிதாக ஓடக்கூடிய வகையில் DesertX Rally உள்ளது. ‘பீக்’ ஸ்டைல் முன் ஃபெண்டர், கயாபா சஸ்பென்ஷன் மற்றும் கூடுதல் 20 மில்லிமீட்டர் டிராவல் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் கடினமான சாலைகளிலும் பயணம் சுலபமாகும். புதிய சென்ட்ரல்-ஸ்போக் வீல்கள் அதிக பிடிப்பை அளிக்கின்றன.
எஞ்சின் திறன்
இந்த பைக் 937 cc Ducati Testastretta 11° ட்வின்-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயங்குகிறது. இது 9,250 rpm-ல் 108 bhp பவரையும், 6,500 rpm-l 92 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. போலி கார்பன் சம்ப் காவலர், மேம்படுத்தப்பட்ட கியர் பெடல், ரியர் பிரேக் லீவர் போன்றவை சேர்க்கப்பட்டிருந்தாலும், சாதாரண மாடலை விட வெறும் 1 கிலோ எடையே அதிகமாகும். ஹைவே கிரூசிங் முதல் ஆஃப்ரோடு வரை எந்த சூழலிலும் சிறப்பாக செயல்படும்.
ரைடிங் மோட்ஸ் மற்றும் டெக்னாலஜி
DesertX Rally-யில் ஆறு வகை ரைடிங் மோட்கள் உள்ளன. அவை Sport, Touring, Urban, Wet, Enduro, Rally ஆகும். இதன் மூலம் அதைப் பொருத்து பைக்கின் நிலைமை ரைடர் எளிதாகக் கட்டுப்படுத்தலாம். கார்னரிங் ABS, Ducati Traction Control (DTC), Ducati Wheelie Control (DWC) போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. 5-அங்குல நிறமுள்ள TFT டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, மியூசிக், கால் மேனேஜ்மென்ட் மற்றும் நெவிகேஷன் ஆதரவை வழங்குகிறது.
விலை மற்றும் சிறப்பம்சங்கள்
இந்த DesertX Rally வேரியண்ட் விலை ரூ.23.71 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இதுவே DesertX தொடரில் அதிக விலையுள்ள மாடல். 21-அங்குல முன் சக்கரம் மற்றும் 18-அங்குல பின்சக்கரம் கொண்ட டுகாட்டியின் முதல் பைக் இதுதான். குறிப்பாக ஆஃப்ரோடு பயணங்களை மனதில் கொண்டுள்ளதால், இதன் தோற்றம் முற்றிலும் அட்வென்ச்சர் ஸ்டைலாக இருக்கும்.
இந்த பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை சேமிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இந்த சலுகை நேரடி விலை குறைப்பு அல்ல. அதற்கு பதிலாக, வாடிக்கையாளர்கள் அந்த தொகைக்கு சமமான ஆடை, ஆக்சசரீஸ், ஜாக்கெட், மெச்சண்டைஸ் போன்ற பொருட்களை டுகாட்டி ஸ்டோரிலிருந்து இலவசமாகப் பெறலாம். சலுகை ஆகஸ்ட் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்.