Asianet News TamilAsianet News Tamil

FIFA World Cup 2022: நாக் அவுட் போட்டியில் யு.எஸ்.ஏ அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் ரவுண்ட் 16ல் யு.எஸ்.ஏ அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.
 

fifa world cup 2022 netherlands beat usa by 3 1 in round of 16 and qualifies to quarter final
Author
First Published Dec 3, 2022, 10:52 PM IST

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், லீக் சுற்று முடிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. 

காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் போட்டியில் நெதர்லாந்து - யு.எஸ்.ஏ அணிகள் மோதின. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் 10வது நிமிடத்திலேயே நெதர்லாந்து வீரர் மெம்ஃபிஸ் டீபே முதல் கோல் அடித்தார்.

சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம்..? மைக் ஹசி கருத்து

ஆட்டத்தின் முதல் பாதி முடிந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்தில் (45+1வது நிமிடத்தில்) டேலி பிளைண்ட்  2வது கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 

FIFA World Cup 2022: போர்ச்சுகலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது தென்கொரியா

ஆட்டத்தின் 2ம் பாதியில் 76வது நிமிடத்தில் யு.எஸ்.ஏ வீரர் ஹாஜி ரைட் அந்த அணிக்கு முதல் கோல் அடித்து கொடுத்தார். 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த நெதர்லாந்து வீரர் டென்ஸெல் டம்ஃப்ரைஸ் 3வது கோல் அடிக்க, 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios