FIFA World Cup: ஃபிரான்ஸ் கோல் அடித்த பின் நொடிக்கு 24,400 டுவீட்.. பற்றி எரியும் டுவிட்டர்! எலான் மஸ்க் தகவல்

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனலில் அர்ஜெண்டினா முதல் பாதி ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்த நிலையில், 2ம் பாதி ஆட்டத்தில் ஃபிரான்ஸ் வீரர் எம்பாப்பே 2 நிமிடத்தில் 2 கோல்கள் அடித்து ஆட்டத்தை டிரா செய்ய, ஃபிரான்ஸ் கோல் அடித்த பின் டுவிட்டரில் நொடிக்கு 24,400 டுவீட்கள் செய்யப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 
 

fifa world cup 2022 final elon musk reveals that 24400 tweets per second after france goals

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனல் இன்று நடந்துவருகிறது. அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான ஃபைனல் ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. தொடக்கம் முதலே கோல் அடிக்க மிகத்தீவிரமாக முயற்சித்த அர்ஜெண்டினா அணி முதல் பாதி ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்தன.

ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்ஸி கோல் அடிக்க, அடுத்த 13வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.

FIFA World Cup: பரபரப்பான ஃபைனலில் 2 நிமிடத்தில் 2 கோல்கள் அடித்து ஆட்டத்தை புரட்டிப்போட்ட எம்பாப்பே

2ம் பாதி ஆட்டத்தில் ஃபிரான்ஸ் அணி கோலுக்காக கடுமையாக முயற்சித்தது. ஆனால் 2ம் பாதி ஆட்டத்தின் முதல் அரைமணி நேரத்தில் கோல் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஃபிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே கோல் அடித்து கணக்கை தொடங்கினார். பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்த அடுத்த நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார் எம்பாப்பே. 2 நிமிடங்களில் எம்பாப்பே 2 கோல்கள் அடிக்க, ஆட்ட முடிவில் 2-2 என டிராவானது.  இதையடுத்து போட்டியின் முடிவை தீர்மானிக்க கூடுதலாக அரைமணி நேரம் வழங்கப்பட்டது.

FIFA World Cup Final: 23வது நிமிடத்தில் கோல் அடித்த மெஸ்ஸி.. முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என அர்ஜெண்டினா முன்னிலை

ஃபிரான்ஸ் கோல் அடித்த பின், டுவிட்டரில் நொடிக்கு 24,400 டுவீட்கள் செய்யப்பட்டதாகவும், இதுவே உலக கோப்பை சமயத்தில் பதிவிடப்பட்ட அதிக டுவீட்கள் என்றும் டுவிட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் டுவீட் செய்துள்ளார். அதுவும் வைரலாகிவருகிறது. 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios