ரசிகரின் செல்ஃபோனை தட்டிவிட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு 2 ஆட்டங்களில் ஆட தடை, ரூ.50 லட்சம் அபராதம்

ரசிகரின் செல்ஃபோனை தட்டிவிட்ட கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு 2 கிளப் ஆட்டங்களில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 

cristiano ronaldo banned for 2 matches and fined rs 50 lakhs over phone incident with fan

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதுமாதிரியான பெரிய அணிகளின் அதிர்ச்சி தோல்விகள், சிறிய அணிகளின் எழுச்சி வெற்றிகள் நிறைந்ததுதான் உலக கோப்பை தொடர்.

இன்று கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி முதல் போட்டியில் கானாவை எதிர்கொள்கிறது. ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருபெரும் கால்பந்து ஜாம்பவான்களுக்கு இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் இந்த உலக கோப்பையை தங்கள் அணிகளுக்கு வென்று கொடுக்க இவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்ற  எதிர்பார்ப்பு நிலவுவதால் அர்ஜெண்டினா, போர்ச்சுகல் அணிகளின் போட்டிகளை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

FIFA World Cup 2022: பரபரப்பான போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் வெற்றி

இன்று கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி கானாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில், ரொனால்டோவிற்கு 2 ஆட்டங்களில் தடை விதிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த தடை ஃபிஃபா உலக கோப்பையில் அல்ல; கிளப் ஆட்டங்களில் தான்.

ரொனால்டோ கடந்த ஏப்ரல் மாதம் கிளப் ஆட்டங்களில் ஆடியபோது, ரசிகர் ஒருவரின் செல்ஃபோனை தட்டிவிட்டார். அதுதொடர்பாக விசாரிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 2 கிளப் ஆட்டங்களில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

FIFA World Cup 2022: ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்த பிரான்ஸ்.. 4-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி..!

மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ விலகிய நிலையில், அடுத்து அவர் எந்த கிளப்பில் இணைந்தாலும் இந்த 2 ஆட்ட தடை அவருக்கு பொருந்தும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios