ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி வெற்றி பெற்றது. 

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் நடந்துவருகிறது. 22வது கால்பந்து உலக கோப்பை கடந்த 20ம் தேதி தொடங்கி கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஈகுவடார், இங்கிலாந்து, நெதர்லாந்து, சவுதி அரேபியா, ஃபிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

இந்த உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி சிறிய அணியான சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

FIFA World Cup 2022: ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்த பிரான்ஸ்.. 4-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி..!

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான ஜெர்மனி - ஜப்பான் இடையேயான போட்டி இன்று நடந்தது. இந்த ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கண்டாகன் கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 1-0 என ஜெர்மனி முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 2ம் பாதியில் வெறித்தனமாக விளையாடிய ஜப்பான் அணி 2 கோல் அடித்தது.

NZ vs IND: டி20 தொடரில் சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்காதது ஏன்? ஹர்திக் பாண்டியா விளக்கம்

2ம் பாதியில் ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ரிட்ஸு டோவானும், 83வது நிமிடத்தில் டகுமா அசானோவும் கோல் அடித்தனர். 2ம் பாதியில் ஜெர்மனி அணி கோல் அடிக்கவில்லை. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் கடைசியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது.