FIFA World Cup 2022: ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்த பிரான்ஸ்.. 4-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி..!
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு நடந்த போட்டியில் குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது.
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு நடந்த போட்டியில் குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் 10வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி டிஃபென்ஸ்-ல் செய்த தவறை தனக்கு சாததகமாக பயன்படுத்தி ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக பிரான்ஸ் வீரர் ஆட்ரியன் ரேபியாட் 27-வது நிமிடத்திலும், ஆலிவர் கிரௌட் 32-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.
பின்னர், ஒன் டச் பாஸ் முறையில் பிரான்ஸ் அணி வீரர்கள் விளையாட தொடங்கினர். இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்திலும், 71வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இறுதியில், பிரான்ஸ் அனி 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.