ராமநாதபுரம் மாவட்டம் கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது 8 மாத பெண்குழந்தையை விற்றுவிட்டதாக குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு புகார் வரவே, குழந்தையுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தனியாக வந்த பெண் கூறிய தகவல்களால் அதிகாரிகளே குழப்பமடைந்துள்ளனர்.

இந்த பெண்ணிற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக அவரது சொந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு கட்டிட வேலைக்கு சென்ற அப்பெண்ணிற்கும் வினோத் என்கிற வாலிபருக்கும் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. அது தெரியவந்த அப் பெண்ணின் கணவர், அவரை விவாகரத்து செய்துள்ளார். பின் வினோத்துடன் அவர் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார்.. இதனிடையே வேலைக்காக வெளிநாடு சென்ற வினோத் அங்கேயே இறந்து விட்டதாக தகவல் வந்துள்ளது.

60 வயதில் ஆபாச படங்களுடன் அலைந்த கிழவன்..! அலேக்காக தூக்கி கம்பி எண்ண வைத்த காவல்துறை..!

அதன்பிறகு நான்கே மாதங்களில் மாற்றுத் திறனாளி ஒருவரை ரேவதி 3 வதாக திருமணம் செய்த சில நாட்களில் அவருக்கு பெண்குழந்தை ஒன்று பிறக்கவே, அது வினோத் மூலமாக பிறந்தது என அவரது உறவினர்களிடம் அப்பெண் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தற்போது நான்காவதாக ஒருவர் ரேவதிக்கு தன்மூலமாக தான் குழந்தை பிறந்ததாக அதை ஒப்படைக்க கோரியிருக்கிறார். உத்திரகோசமங்கையைச் சேர்ந்த சரத் என்னும் வேல்முருகன் என்பவர் கொடுத்திருக்கும் புகாரில், வினோத் வெளிநாடு சென்ற நேரத்தில் ரேவதியுடன் தான் நெருக்கமாக இருந்ததாகவும் அதன்காரணமாகவே அவருக்கு குழந்தை பிறந்தது என தெரிவித்துள்ளார்.

5ம் வகுப்பு மாணவியை சீரழிக்க துடித்த 9ம் வகுப்பு மாணவன்..! கிணற்று பகுதிக்கு கூட்டிச்சென்று அட்டகாசம்..!

ஆனால் அதை அதிரடியாக மறுக்கும் ரேவதி, அக்குழந்தை வினோத் மூலம் பிறந்தது தான் என கூறுகிறார். இதனால் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தைக்கு மரபணு பரிசோதனை செய்த பிறகே அது யாருக்கு பிறந்தது என்கிற விபரம் தெரியவரும். இது ஒரு புறம் இருக்க தற்போது அப்பெண் மீண்டும் கர்ப்பம் தரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு நன்றி'..! டெல்லி வெற்றியில் அதிரடி காட்டும் பிரசாந்த் கிஷோர்..!