கோவை மாவட்டம் வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 15 வயது சிறுவனான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் எதிரே பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 9 வயது சிறுமி வசித்து வருகிறார். காது கேட்காத மாற்றுத்திறனாளி சிறுமியான இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். சிறுமி வீட்டிற்கு கண்ணன் அடிக்கடி விளையாட செல்வார் என்று தெரிகிறது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் இருந்துள்ளார். அங்கு சென்ற கண்ணன் சிறுமியை அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் ஆள்நடமாட்டமின்றி இருக்கும் ஒரு கிணற்று பகுதிக்கு சென்றுள்ளார். பின் சிறுமியிடம் பேச்சுக்கொடுத்த கண்ணன், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சல் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

60 வயதில் ஆபாச படங்களுடன் அலைந்த கிழவன்..! அலேக்காக தூக்கி கம்பி எண்ண வைத்த காவல்துறை..!

ஆட்கள் திரண்டு வருவதைக்கண்டு சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். அங்கு அழுது கொண்டிருந்த சிறுமியை அவர்கள் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பெற்றோர் என்னவென்று விசாரித்த போது நடந்தவற்றை சிறுமி கூறியிருக்கிறார். அதைக்கேட்டு செய்வதறியாது திகைத்த அவர்கள் உடனடியாக காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் சிறுவனை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.