திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி.புரத்தை சேர்ந்தவர் மணிபிரபு (45). இவரது மனைவி சுபாஷினி. இந்த தம்பதியினருக்கு மதுவர்னிகா, தபுவைஷ்ணவி என்று இரு மகள்களும் உள்ளனர். மணிபிரபு மேட்டுக்காடு பகுதியில் செயல்படும் மின் அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது அலுவகத்தில் கொழுமத்தை சேர்ந்த கண்ணன் (40) என்பவர் வயர் மேனாக பணியாற்றுகிறார்.

இன்று காலையில் இருவரும் வழக்கம் போல அலுவகத்திற்கு வந்துள்ளனர். அங்கு மணிபிரபுவிற்கும் கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த கண்ணன், ரீப்பர் கட்டையால் மணி பிரபுவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் மணி பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

'போகாதீங்க மோடிஜி'..! சமூக வலைதளங்களில் பாசத்தை தெறிக்கவிடும் இந்தியர்கள்..!

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் மணி பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். வழக்கு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் மின் ஊழியர் கண்ணனுக்கு மணிபிரபு பணிசுமை அதிகம் கொடுத்ததாகவும் அதன்காரணமாக அவரை கண்ணன் அடித்துக்கொன்றதாக தெரிகிறது என்று போலீசார் கூறியுள்ளனர். எனினும் தலைமறைவாக இருக்கும் கண்ணன் கைது செய்யப்பட்டால் தான் முழுவிபரமும் தெரிய வரும் என்பதால் அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

190 கி.மீ...! 1 மணி 50 நிமிடங்கள்..! நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!