புதிய ஐபோன் வாங்க பெற்ற குழந்தையை விற்ற பெற்றோர்! எதற்காக தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!
மேற்கு வங்க மாநிலம், வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெய்தேவ். இவருடைய மனைவி ஷதி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் 7 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பதற்காக 8 மாத குழந்தையை விற்று புதிய ஐபோன் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெய்தேவ். இவருடைய மனைவி ஷதி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் 7 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இவர்கள் செல்போன் மூலம் வீடியோக்களை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்துள்ளனர்.
இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடந்த விபச்சாரம்.. கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு.. அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்..!
இந்நிலையில், ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பதற்காக விலை உயர்ந்த ஐபோனை வாங்க நினைத்துள்ளனர். ஆனால், அதை வாங்குவதற்கான பணம் இல்லை. இதற்காக தன்னுடைய 8 மாத ஆண் குழந்தையை விற்று அதன் மூலம் வந்த பணத்தின் மூலம் ஐபோனை வாங்கியுள்ளார்.
இதையும் படிங்க;- பெண்ணை மரத்தில் கட்டி, ஆடைகளைக் கிழித்து, அடி உதை... ஜார்க்கண்டில் நடந்த கொடூர சம்பவம்
குழந்தையை காணவில்லை என அக்கம் பக்கத்தினர் விசாரித்த போது பெற்றோர் முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தியதில் ஐபோனுக்காக குழந்தையை விற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையை விற்ற தாய் ஷதி மற்றும் வாங்கிய பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.