சென்னையில் மஜாவாக நடந்த விபச்சாரம்.. கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு.. அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்..!
சென்னை வடபழனியில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம் தொடர்பாக 2 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
சென்னை வடபழனி வடக்கு மாட வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அடிக்கடி வாலிபர்கள் பலர் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
பின்னர், விபச்சாரம் நடப்பது உறுதியானதை அடுத்து அடுக்குமாடி குடியிருப்புக்குள் அதிரடியான நுழைந்து வீட்டிற்குள் சோதனை நடத்தினர். அப்போது, வாட்ஸ்அப் குழு மூலம் இளம்பெண்கள் புகைப்படங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் பாலியல் புரோக்கரான பஷீர் அகமது இப்ராஹிம் (60), முகமது அலி (27) ஆகியோரை கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம்பெண்கள் மீட்டகப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.