Asianet News TamilAsianet News Tamil

ஸ்வீட் கொடுத்து சந்தோஷப்படுத்திய பின் படுகொலை... ஃபேஸ்புக் ஷாட்டில் கிடைத்த நண்பர்களின் அடங்காத மதவெறி..!

முகநூல் பக்கத்தில் தொடர்பு கொண்டு திடீர் நண்பர்களான மூவர்  மதம் சம்பந்தமாக  கருத்து தெரிவித்த  கமலேஷ் திவாரியை கொடூரக் கொலைசெய்த சம்பவம் தெரிய வந்துள்ளது. 
 

UP accused murderers arrested in Kamlesh Tiwari Murder Case
Author
Uttar Pradesh, First Published Oct 23, 2019, 1:00 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் இந்து சமாஜ் பிரமுகர் கமலேஷ் திவாரி கடந்த சில தினங்களுக்கு முன்பாக, மதம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாகக் கூறப்படுகிறது.

UP accused murderers arrested in Kamlesh Tiwari Murder Case

இதனால் ஆத்திரமடைந்த மத நம்பிக்கைவாதிகள் சிலர், திட்டமிட்டு, கமலேஷ் திவாரியின் நட்பு வட்டத்தில் இணைந்து, அவருடன் நெருக்கமாக பேசி, அவருக்கு ஸ்வீட் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவரும் ஒப்புக்கொண்டதை அடுத்து, அஷ்பாக் ஷேக், மொயினுதீன் பத்தான், மேலும் 2 பேர் என 4 பேர் சேர்ந்து அவரை சந்தித்து 30 நிமிடங்கள் உரையாடி உள்ளனர்.

இதையும் படிங்க:- மதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..? எஸ்.வி.சேகர் கொடுத்த நெத்தியடி..!

UP accused murderers arrested in Kamlesh Tiwari Murder Case

தன்னைக் கொல்ல வந்தவர்களிடம் அது தெரியாமல் சகஜமாக கலமேஷ் திவாரி உரையாடிக் கொண்டிருந்துள்ளார். அதன் பிறகு குஜராத் சூரத் ஸ்வீட் கடையில் வாங்கிய இனிப்புகளை அவரிடத்தில் கொடுத்துள்ளனர். அப்போதுதான் அவர் எதிர்பாராத வகையில் கொலை செய்தனர். இதனால் உத்தரப் பிரதேசமே நடுங்கியது. ஆனால் கமலேஷ் திவாரியின் தாயார், கமலேஷ் திவாரியின் மரணத்தை மீண்டும் இந்து-முஸ்லீம் முரணுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று டிவி நிகழ்ச்சி ஒன்றில் இருந்து கோபமாக வெளியேறினார்

.UP accused murderers arrested in Kamlesh Tiwari Murder Case

இந்த நிலையில், சூரத் இனிப்பு கடை, பேஸ்புக் சாட் உள்ளிட்டவைகளை வைத்தும், சிசிடிவி கேமராக்களை வைத்தும் இரண்டு கட்டமாக குற்றவாளிகளை போலீஸார் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க:- பழங்குடியினருடன் தமிழிசை அசத்தல் நடனம்... வைரலாகும் வீடியோ..!

Follow Us:
Download App:
  • android
  • ios