விஜய் எங்காவது பொதுவெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாக பேசி மற்ற மதத்தை தாழ்வாக பேசி பார்த்துள்ளீரா? என எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடைகளில் பிகில் உடை  நடிகர் ஜோசப் விஜய்  தனது பல  இந்து ரசிகர்களை  மதம் மாற்றம் செய்ய மிஷனரி குழுவிலிருந்து பெரிய தொகை பெற்றிருக்கிறார் என ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஹெச்.ராசாவுக்கும் எஸ்.வி.சேகருக்கும் இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன எனக்கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில்  பதில் அளித்துள்ள எஸ்.வி.சேகர், ’விஜய் வீபூதி பூசி நடிக்கும் போது பிடிக்கும் நமக்கு அவர் சிலுவை அணியும் போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொது வெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாக பேசி மற்ற மதத்தை தாழ்வாக பேசி பார்த்துள்ளீரா?
  


இதை பெருதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து.  விஜய் ஒரு நல்ல நடிகர். அந்த நடிகரின் ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராக்‌ஷம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா?’’என பதிலடி கொடுத்துள்ளார்.