என்னுடைய காதலிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீங்களா? மாமியார், மருமகளை கதறவிட்டு கொன்ற பயங்கரம்..!

மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(40). கார் ஓட்டுநர். இவரது மனைவி அழகுபிரியா(22), மணிகண்டனின் தாயார் மயிலம்மாள்  (65) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். 

Two womens murder in madurai

மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம் அருகே மாமியார், மருமகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(40). கார் ஓட்டுநர். இவரது மனைவி அழகுபிரியா(22), மணிகண்டனின் தாயார் மயிலம்மாள்  (65) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மணிகண்டன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது மனைவி மற்றும் தாயார்  வீட்டின் பின்புறத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். இதை சற்றும் எதிர்பாராத மணிகண்டன் அதிர்ச்சியடைந்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க;- திமுக நிர்வாகியை இதற்காக தான் கொலை செய்தோம்.! பாமக பிரமுகர் உட்பட 17 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மணிகண்டனின் அக்கா மகன் குணசீலன்,  ரிஷி ஆகிய 2 பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். முதலில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க;-  ஓயாமல் கள்ளக்காதலன் டார்ச்சர்! 23 வயது இளைஞருடன் சேர்ந்து 39 வயது ஜோதி என்ன செய்தார் தெரியுமா?

இதனையடுத்து போலீசார் பாணியில் விசாரணை நடத்தியதை அடுத்து இரு பெண்களையும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். குணசீலன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதற்கு அத்தை அழகுபிரியாவும், அம்மாச்சி மகிழம்மாளும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவரையும் கொலை செய்ததாக கூறியுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios