MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • ஓயாமல் கள்ளக்காதலன் டார்ச்சர்! 23 வயது இளைஞருடன் சேர்ந்து 39 வயது ஜோதி என்ன செய்தார் தெரியுமா?

ஓயாமல் கள்ளக்காதலன் டார்ச்சர்! 23 வயது இளைஞருடன் சேர்ந்து 39 வயது ஜோதி என்ன செய்தார் தெரியுமா?

கள்ளக்காதலனை அடித்தே கொன்ற அங்கன்வாடி மைய ஆசிரியை மற்றும் அவரது தங்கை மகன் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 17 2023, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேரிகை கொளதாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (39). இவர் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் கேசவமூர்த்தி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த லாரி ஓட்டுநரான வெங்கடேஷ்(40) என்பவருக்கும் ஜோதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனிடையே ஜோதியின் தங்கை மகனான ஹரீஷ் (23) என்பவர், அடிக்கடி ஜோதி வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது ஜோதிக்கும், வெங்கடேசுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் மூலமாக தெரியவந்ததை அடுத்து ஹரீஷ் தனது பெரியம்மாவை கண்டித்துள்ளார். 

34

இதனால் ஜோதி, கள்ளக்காதலன் வெங்கடேசை தனது வீட்டுக்கு இனிமேல் வரவேண்டாம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, ஜோதியின் வீட்டிற்கு வெங்கடேஷ் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ஹரீஷ்  எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்? ஆவேசமாக கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஜோதியும், ஹரீசும் சேர்ந்து கற்கள் மற்றும் கட்டையால் வெங்கடேசை சரமாரியாக அடித்தனர். இதில் வெங்கடேஷ் படுகாயமடைந்தார்.

44

இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜோதி மற்றும் ஹரீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Recommended image2
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்
Recommended image3
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved