சென்னை கீழ்ப்பாக்கத்தில், குழந்தை பிறக்க சிகிச்சை அளிப்பதாகக் கூறி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சித்த மருத்துவரை தர்டி அடி போலீசார் கைது செய்துள்ளனர். 

ஆவடி அடுத்த பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி லாவண்யா (28). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன், ராஜேஷ் மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த போது கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியை சேர்ந்த சித்த மருத்துவர் அண்ணாதுரை (32) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீக்கிரமாக குணமடைந்தது. 

இதையடுத்து, தனக்கு கடந்த 3 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்பது தொடர்பாக அண்ணாதுரையிடம் ராஜேஷ் தெரிவித்துள்ளார். அதற்கு அவர், ஆயுர்வேத சிகிச்சை பெற்றால், ஒரே மாதத்தில் குழந்தை பிறக்கும் என்று கூறியுள்ளார். பின்னர், ராஜேஷ் மற்றும் லாவண்யாவை வரவழைத்து அண்ணாதுரை பரிசோதித்துள்ளார். இதனையடுத்து, 30 நாட்கள் கழித்து வாருங்கள், குழந்தை பிறப்புக்கான சிறப்பு மருந்து தருகிறேன் என்று சித்த மருத்துவர் கூறியுள்ளார். 

இந்நிலையில், ராஜேசை தொடர்பு கொண்ட அண்ணாதுரை, சிறப்பு மருந்து விட்டது வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். கணவர் வெளியில் சென்றுவிட்டதால் மனைவி தனியாக மருந்தை வாங்குவதற்காக கிளினிக் சென்றுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மருத்துவர் உங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி கிளினிக்கில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்ற லாவண்யாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். இங்கு நடந்தது தொடர்பாக கணவர் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்திற்கு வருவதற்குள் அண்ணாதுரை தப்பியோடிவிட்டார். வழக்குப்பதிவு செய்த கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த அண்ணாதுரையை கைது செய்தனர். இதேபோல், வேறு பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.