தன் மனைவி என நினைத்து அடுத்தவன் பொண்டாட்டியை கொன்ற குடிகாரன்.! வெளியான CCTV காட்சிகள் -அதிர்ச்சி !

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவேந்திரன் தனலட்சுமி இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தனலட்சுமி ஆம்பூருக்கு வந்து தங்கியிருந்தார். 

The next person who thought he was his wife was the worker who cut his wife at ambur

திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலை கல்லூரி அருகே உள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(55). மாட்டு வியாபாரி. இவருடைய முதல் மனைவி ரேணுகாம்பாள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இறந்துவிட்டதால் அவரது மனைவி தனலட்சுமியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவேந்திரன் தனலட்சுமி இடையே தகராறு ஏற்பட்டது.

The next person who thought he was his wife was the worker who cut his wife at ambur

இதை தொடர்ந்து தனலட்சுமி ஆம்பூருக்கு வந்து தங்கியிருந்தார். தேவேந்திரனின் மனைவி தனலட்சுமி ஆம்பூரில் உள்ள கடைகளின் முன்பாக இரவில் உறங்குவதாக தேவேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் ஆம்பூர் வந்த தேவேந்திரன் இருட்டில் அடையாளம் தெரியாமல் தன்னுடைய மனைவி தனலட்சுமி என்று நினைத்து வேறோரு பெண்ணின் கழுத்து மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதனால் அந்த பெண் அலறியுள்ளார். அப்போதுதான் தான் குத்தியது மனைவியல்ல வேற ஒருவரின் மனைவி என தேவேந்திரனுக்கு தெரியவந்தது.

அலறல் சத்தம் கேட்டு தனலட்சுமி திடுக்கிட்டு எழுந்தார். தனலட்சுமியை கண்ட தேவேந்திரன் ஆத்திரம் அடங்காமல் அவரையும் கத்தியால் சரமாரியாக குத்தினார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் தேவேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது தேவேந்திரன் குத்திய வேறொரு பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

மேலும் படுகாயமடைந்து இருந்த தனலட்சுமியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இரவு நேரங்களில் ஆதரவற்றவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்கள் படுத்து உறங்குவது வழக்கம். ஆம்பூர் கம்பிகொள்ளைப் பகுதியை சேர்ந்த ஜான் பாஷா. இவரை ஒரு திருட்டு வழக்கில் போலீசார் அவரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இவரது மனைவி கவுசர். தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது.

The next person who thought he was his wife was the worker who cut his wife at ambur

நேற்று இரவு தேவேந்திரன் மனைவி தனலட்சுமி, நவீத் மனைவி கவுசர்,அவரது மாமியார் பர்வீன், மற்றும் குழந்தைகளுடன் தூங்கி கொண்டு இருந்தனர். அங்கு தூங்கிக்கொண்டிருந்த அனைவரும் பர்தா அணிந்து இருந்தனர். அப்போது தான் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. தேவேந்திரன் தனது மனைவி தனலட்சுமிக்கு பதிலாக நவீத் மனைவி கவுசரை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : உதயநிதி அமைச்சர் இல்லை..அடுத்த முதல்வரே அவர்தான்.! அடேங்கப்பா! - திமுகவில் சலசலப்பு

இதையும் படிங்க : வடகொரியாவில் அதிகரித்த கொரோனா..இஞ்சி,மூலிகை தேநீர் குடிங்க.! அதிபர் சொன்ன லிஸ்ட் இதோ !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios