உதயநிதி அமைச்சர் இல்லை..அடுத்த முதல்வரே அவர்தான்.! அடேங்கப்பா! - திமுகவில் சலசலப்பு

Udhayanidhi Stalin : திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே அவர் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது உதயநிதியின் காரில் செய்யப்பட்டுள்ள மாற்றம் வியூகங்களை கிளப்பியுள்ளது.

DMK minister kkssr Ramachandran speech about udhayanidhi Stalin as a next cm in tamilnadu

உதயநிதி ஸ்டாலின் :

திமுகவின் இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அரசியலில் பிஸியாக இருக்கிறார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தவறாமல் கலந்துகொள்கிறார். திமுக நிகழ்ச்சிகளிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொண்டு பம்பரமாக சுழன்று வருகிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதுமே அமைச்சரவையில் யார் யார் இடம் பெறப் போகிறார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் அமைந்த பெயர் பட்டியல் சமூக ஊடகங்களில் வெளியானது. 

அப்படி வெளியான பட்டியல்கள் எல்லாவற்றிலும் முதல்வர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயர் தவறாமல் இடம்பெற்றது. நிச்சயமாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை பட்டியல் வெளியானபோது, அதில் உதயநிதியின் பெயர் இடம்பெறவில்லை. இது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றமாக அமைந்தது.

DMK minister kkssr Ramachandran speech about udhayanidhi Stalin as a next cm in tamilnadu

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து 1 ஆண்டு முடிந்து விட்டது. ஆனால், இன்னும், உதயநிதி விரைவில் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் பேச்சுகளும் அப்படியேதான் உள்ளன. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, சேகர் பாபு போன்றவர்கள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற தங்களின் விருப்பங்களை வெளிப்படையாகவே தெரிவித்தனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

அமைச்சரா ? முதல்வரா ? :

ஆனாலும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி எப்போது கிடைக்கும் என்ற கேள்வி தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில்தான், உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகளைக் கிளப்பி விட்டுள்ளது. அண்மையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முடித்துவிட்டு, வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதயநிதியின் காரில் தவறுதலாக ஏற முயன்றார். 

அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் வேகமாக வந்து இது உங்கள் கார் இல்லை சார் என்று சொல்ல எடப்பாடி பழனிசாமி சுதாரித்துக்கொண்டு அவருடைய காரை நோக்கி சென்றார்.  இந்த சம்பவம் பல ஊடகங்களில் செய்தியாக வெளியானது. இதற்கு காரணம், உதயநிதியின் காரும் இ.பி.எஸ்-சின் காரும் ஒரே மாதிரியாக இருப்பதுதான் என்று சொல்லப்பட்டது.முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா, இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அதன்பிறகு அமைச்சர் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் :

இந்நிலையில் உதயநிதி தான் அடுத்த முதல்வர் என்று போட்டு உடைத்திருக்கிறார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்க கூட்டம் நடந்தது.  இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன்,தமிழகத்தில் இன்னும் 20 ஆண்டுகள் ஸ்டாலின் தான் முதல்வராக இருப்பார்.நமது முதல்வர் நல்ல முதல்வர்.  ஒவ்வொரு குடும்பத்திலும் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.  

DMK minister kkssr Ramachandran speech about udhayanidhi Stalin as a next cm in tamilnadu

டெல்லிக்கு பயப்படாத தலைமை எனது தலைமை. கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது போல அவருக்கு பின்னர் உதயநிதி முதல்வராக பொறுப்பேற்பதற்கு தயாராக இருக்கிறார். வாரிசாக இருந்தாலும் இருவரும் பல்வேறு சிரமங்களை தாண்டி தான் மேலே வந்தார்கள் என்று சொல்லி திமுகவிற்குள் சலப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அமைச்சர்.

இதையும் படிங்க : "பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும்..கொலைகாரனை பத்தி பேசுறீங்க.!" கடுப்பான அமெரிக்கை நாராயணன்

இதையும் படிங்க : மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு.! குவாட்டர் ரூ.20..பீர் ரூ.10 குடிமகன்கள் ஷாக் !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios