Asianet News TamilAsianet News Tamil

வடகொரியாவில் அதிகரித்த கொரோனா..இஞ்சி,மூலிகை தேநீர் குடிங்க.! அதிபர் சொன்ன லிஸ்ட் இதோ !

North Korea : கொரோனாவை எதிர்கொள்வதற்காக இஞ்சி, மூலிகை தேநீர் போன்ற பாரம்பரிய மருந்துகளை மக்கள்  பருக வேண்டும் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் மூலமாக பொதுமக்களிடம் பரிந்துரைத்து வருகிறது. 

North Korea Fighting Covid wit traditional medicine recommend ginger health tea and more
Author
First Published May 21, 2022, 2:28 PM IST

வடகொரியாவின் அதிகரிக்கும் கொரோனா :

2020ம் ஆண்டு கொரோனா பரவ தொடங்கியதுமே,  எல்லைகளை முழுமையாக அடைத்து உலக நாடுகளிடம் இருந்து முற்றிலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது  வடகொரியா. அந்நாட்டிற்கு சீனா லட்சக்கணக்கான தடுப்பூசிகளை வழங்கிய போது, தங்கள் நாட்டில் தொற்று பாதிப்பே இல்லை எனவும், அதனை தேவைப்படுவோருக்கு வழங்குங்கள் என்றும் கூறி, தடுப்பூசிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் திருப்பி அனுப்பினார். இதனால், அந்நாட்டில் ஒருவருக்கும் கொரோனா தடுப்பூசி என்பதே செலுத்தப்படவில்லை.

North Korea Fighting Covid wit traditional medicine recommend ginger health tea and more

இந்நிலையில், தொற்று பரவ தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் முதன் முறையாக ஒருவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த எண்ணிக்கை தற்போது 20 லட்சத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தொற்று பரவலை தடுக்க கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன், சாதாரண காய்ச்சலுக்கு வழங்கப்படும், பாரம்பரிய சிகிச்சை முறைகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அங்கு போதுமான மருத்துவ கட்டமைப்பு இல்லாமல், மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு திணறி வருகின்றது.   இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் சில வடகொரியாவுக்கு உதவுவதாக சொன்னாலும் வெளிநாடுகளின் மருத்துவ உதவியை ஏற்க மறுத்து வருகிறார் வடகொரிய அதிபர். அதற்கு பதிலாக கொரோனாவை எதிர்கொள்ள பாரம்பரிய மருந்துகளை மட்டுமே அவர் பரிந்துரைத்து வருகிறார்.  

இஞ்சி, மூலிகை தேநீர் :

கொரோனாவை எதிர்கொள்வதற்காக இஞ்சி, மூலிகை தேநீர் போன்ற பாரம்பரிய மருந்துகளை மக்கள்  பருக வேண்டும் என்று அந்நாட்டு அரசு ஊடகங்கள் மூலமாக பொதுமக்களிடம் பரிந்துரைத்து வருகிறது. அதாவது, காய்ச்சலினால் அதிகம் பாதிக்கப்படாத நோயாளிகள்  இஞ்சி அல்லது பாலுடன் கலந்த ஹனி தேநீர் மற்றும் வில்லோ-இலை குடிநீர் அகியவற்றை தொடர்ந்து பருகுமாறு வடகொரியாவின் ஆளும் கட்சி செய்தித்தாள் ரோடாங் சிம்னுன்  அறிவுறுத்துயுள்ளது.

North Korea Fighting Covid wit traditional medicine recommend ginger health tea and more

மேலும் இத்தகைய சூடான பானங்களை தொடர்ந்து பருகுவதன் முலம் தொண்டை புண் அல்லது இருமல், மற்றும் உடலின் நீரேற்றத்திற்கு உதவுகிறது என தெரிவித்துள்ளது. ஆனால் இவை கொரோனா வைரஸை கட்டுபடுத்துவற்கான சிகிச்சை முறையில்லை எனவும் தெரிவித்துள்ளது. உப்பு கலந்த தண்ணீரில் வாய் கொப்பளிப்பதன் முலம் உடலில் நுழையும் வைரஸை செயலிலக்க செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : உதயநிதி அமைச்சர் இல்லை..அடுத்த முதல்வரே அவர்தான்.! அடேங்கப்பா! - திமுகவில் சலசலப்பு

இதையும் படிங்க : "பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும்..கொலைகாரனை பத்தி பேசுறீங்க.!" கடுப்பான அமெரிக்கை நாராயணன்

Follow Us:
Download App:
  • android
  • ios