சண்டையை தடுக்க சென்ற மைத்துனர் கொலை...! விதவையான தங்கச்சி.. மனமுடைந்த இளைஞர் தற்கொலை

அண்ணன்,தம்பி இடையே ஏற்பட்ட மோதலில்  தங்கையின் கணவரைக் கொன்றுவிட்டு, இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

The man who killed his younger sister husband in a clash in Theni committed suicide

அண்ணன்,தம்பி இடையே மோதல்

தேனி மாவட்டம் கம்பம் கிராமச்சாவடி தெருவில் வசிப்பவர் சிவக்குமார் (29)அவரது தம்பி சங்கர் (27) கட்டிடத் தொழிலாளிகளான அண்ணன் தம்பி இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.நேற்று இரவு இருவருக்கும்  குடும்பத்தகராறு ஏற்பட்டதில் அண்ணன் சிவக்குமாரை அவரது தம்பி சங்கர் கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது  இருவருக்கும் ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்ய முயற்சி செய்த சிவக்குமார், சங்கரின் தங்கையின் கணவர் காளிராஜ் வயது  (32)மீது கத்திக்குத்து விழுந்துள்ளது. இதனால்   பலத்த காயம்  ஏற்பட்டு காளிராஜ் துடித்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த காளிராஜை உறவினர்கள் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

என்னைவிட பெரிய ரவுடியா நீ? ரீகனை ரவுண்ட் கட்டி போட்டு தள்ளிய கொடூரம்.. நாகர்கோவிலில் பயங்கரம்.!

அய்யய்யோ என்ன காப்பாத்துங்க.. நடுரோட்டில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை..!

The man who killed his younger sister husband in a clash in Theni committed suicide

தங்கை கணவரை கொன்றவர் தற்கொலை

இந்த தகவலை அறிந்த அண்ணனை கத்தியால் குத்தி கொலை  முயற்சி செய்த சங்கர், தங்கையின் கணவரை கத்தியால் குத்தி கொன்று விட்டோமே என்ற பயத்தில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் சங்கரின் பிரேதத்தைக் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அண்ணன் தம்பி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தங்கையின் கணவரை கத்தியால் குத்தி கொன்று விட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கம்பம் நகரில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.

இதையும் படியுங்கள்

நெல்லையில் ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை..! அதிர்ச்சியூட்டும் பின்னனி காரணங்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios