அய்யய்யோ என்ன காப்பாத்துங்க.. நடுரோட்டில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை..!
சென்னையில் இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (26). இவர் தனியார் டெலிபோன் வயர் பதிக்கும் வேலை செய்து வந்தார். இவர் மீது வெள்ளவேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பூந்தமல்லி அடுத்த புளியம்பேடு, நூம்பல் பகுதியில் டெலிபோன் வயர் பதிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் உதவியாளர் ஒருவருடன் சென்று கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- தந்தை பேச்சை கேட்காமல் காதல் திருமணம்! ஆத்திரத்தில் மகள்,மருமகன் ஆணவக் கொலை? 26 நாளில் முடிந்த வாழ்க்கை.!
அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். அவர்களிடமிருந்து ஸ்டீபன் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டிச் சென்று சுத்துபோட்டு சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடன் வந்த உதவியாளர் லேசான காயத்துடன் தப்பினார்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக பூந்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஸ்டீபனுடன் வந்து காயமடைந்த உதவியாளரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவரிடமும் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தவல கல்யாணம் பண்ணிட்டியா.. பிளாக் மெயில் செய்த காதலியின் தலையை தனியாக எடுத்த காதலன்
விசாரணையில் வெள்ளவேடு பகுதியை சேர்ந்த எபினேசர், கிருபாகரன், திருப்பதி உள்ளிட்ட 6 பேர் ஸ்டீபனை வெட்டி கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணையில் இறங்கியுள்ளனர்.