காதலி பேச மறுத்ததால் காதலன் வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்த முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

காதலி பேச மறுத்ததால் காதலன் வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்த முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, காதலிப்பதுபோல் நடித்து கற்பழித்து ஏமாற்றுவது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, காதலித்து திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது போன்ற எண்ணற்ற கொடுமைகளை பெண்கள் அனுபவித்து வருகிறார். இந்த வரிசையில் காதலனிடம் பேச மறுத்த காதலியை காதலன் வீடு புகுந்து கழுத்தை அறுத்துள்ள கொடூரம் நடந்துள்ளது.

முழு விவரம் பின்வருமாறு:- திருச்செந்தூர் அருகே முத்தையாபுரம் சேர்ந்தவர் கவிதா (20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் டீச்சர் ட்ரைனிங் படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (21) என்ற இளைஞர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் காதல் விவகாரம் கவிதாவின் தந்தைக்கு தெரிய வந்தது, அவர் இதை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலன் கார்த்திக்கிடம் இருந்து கவிதா விலக ஆரம்பித்தார். திடீரென கார்த்திக்கிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

இதையும் படியுங்கள்: கச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கு.. 27 பேர் குற்றவாளிகள்.. தண்டனை விவரம் வெளியானது..!

இது கார்த்திக்குக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது, காதலி பேச மறுப்பதன் காரணம் என்ன என தெரியாமல் குழம்பி வந்தார். பல இடங்களில் காதலியை வழிமறித்து ஏன் பேச மறுக்கிறாய் என கேட்டு வந்தார். ஆனால் அதற்கு காதலி கவிதா சரியாக பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் காதலியை சந்திக்க அவரது வீட்டுக்குள் நுழைந்த கார்த்திக், தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார், ஆனால் கவிதா அதைக் கேட்கவில்லை, ஆத்திரமடைந்த கார்த்திக் மறைத்து வைத்திருந்த கத்தியால் கவிதாவின் கழுத்தை சரமாரியாக அறுத்தார்.

இதில் வலி தாங்க முடியாமல் கவிதா அலறினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர், அதற்குள் கார்த்திக் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார், இதையடுத்து கவிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் வீட்டுக்கு சென்ற கார்த்திக் தனது அறையை பூட்டி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார்.

இதையும் படியுங்கள்:  சொல்ல சொல்ல கேட்காம அவன நம்பி போனியே!இப்படி உன்ன பண்ணிட்டாங்களே!காதல் திருமணம் செய்த பெண் 37 நாளில் மர்மமரணம்

அதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேச மறுத்த காதலியை காதலன் கழுத்தை அறுத்துள்ள சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.